`கிம்... எனது மேஜை பட்டன் வேலை செய்யும்!' - வடகொரியாவுக்கு ட்ரம்ப்பின் நேரடி சவால்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு சவால்விடும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், `எனது மேசையிலும் அணு ஆயுதத்தை ஏவுவதற்கான பட்டன் உள்ளது' என்று கூறி பகீர் கிளப்பியுள்ளார். 

ட்ரம்ப்

வடகொரிய அதிபர் கிம், புத்தாண்டையொட்டி அந்நாட்டு மக்களிடம் ஊடகம் வாயிலாக உரையாடினார். புத்தாண்டு வாழ்த்து கூறிவிட்டு அவர் பேசியதாவது, `வடகொரியா அணுசக்தி நாடாக உருவெடுத்து வருகிறது. அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் பெரியளவில் தயாரிப்பதே நம் இலக்கு. என் மேஜையில் எப்போதும் அணு ஆயுதத்தை ஏவுவதற்கான பட்டன் இருக்கும்' என்று பேசி உலக நாடுகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதற்கு டொனால்ட் ட்ரம்ப், `வடகொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன், `எனது மேஜையில் எப்போதும் அணு ஆயுதத்தை ஏவுவதற்கான பட்டன் இருக்கும்' என்று கூறியுள்ளார். என் மேஜையிலும் அதைப் போன்றே ஒரு பட்டன் இருக்கிறது என்று அவரிடம் யாராவது எடுத்துச் சொல்லுங்கள். அந்தப் பட்டன், மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் பெரியதாகவும் இருக்கும். எனது பட்டன் வேலையும் செய்யும்' என்று எதிர்வினையாற்றியுள்ளார்.  


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!