வளைவில் மின்னல் வேகத்தில் சென்ற பேருந்து! பறிபோன 48 பயணிகளின் உயிர்கள்

பெரு பேருந்து விபத்து

பெரு நாட்டில் கடலோரப் பகுதியையொட்டியுள்ள சாலையில் சென்ற பேருந்து எதிரே வந்த டிரக்குடன் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 48 பேர் உயிரிழந்தனர்.

ஹூவாச்சோ என்ற இடத்திலிருந்து தலைநகர் லிமா நோக்கி 55 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து, சாலையோர வளைவில் திரும்பியபோது, டிரக்குடன் மோதி ஏற்பட்ட விபத்தில், 100 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் அந்தப் பேருந்து கடலோரப் பகுதிக்கு அருகே கவிழ்ந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 48 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரவு நேரத்தில் இவ்விபத்து ஏற்பட்டதால், மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியாமல், மீட்புக்குழுவினர் தவித்தனர். காவல்துறையினரின் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு, பேருந்தை மீட்கும் பணிகள் நடைபெற்றன.

கடல் அலைகள் பேருந்தை அடித்துச் செல்லாதவகையில், மிகப்பெரிய கயிறு மூலம் பேருந்து மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதிவேகத்தில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததாலேயே விபத்து ஏற்பட்டதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!