இரு நாட்டு உறவுகுறித்து தொலைபேசிமூலம் உரையாடிய மோடி - புதின்! | Prime Minister Narendra Modi and Russian President Vladimir Putin have discussed the development of bilateral relations

வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (04/01/2018)

கடைசி தொடர்பு:10:20 (04/01/2018)

இரு நாட்டு உறவுகுறித்து தொலைபேசிமூலம் உரையாடிய மோடி - புதின்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசிமூலம் உரையாடியுள்ளனர். அப்போது அவர்கள், இரு நாட்டு உறவுகுறித்தும், சர்வதேச அரசியல் குறித்தும் உரையாடியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

மோடி - புதின்

இதுகுறித்து புதின் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், இந்திய - ரஷ்ய உறவில், கடந்த ஆண்டு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் பார்க்கிறேன். ஏனென்றால், இரு நாட்டுக்கும் பரஸ்பர உறவு தொடங்கி கடந்த ஆண்டுடன் 70 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இனி வரும் காலங்களிலும் இந்திய - ரஷ்ய உறவு மிகவும் வலுவானதாக இருக்கும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. குறிப்பாக, அரசியல், வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், கலாசாரம் எனப் பல்வேறு துறைகளில் இந்தியாவுடன் ரஷ்யா கூட்டாக இணைந்து செயல்படும் என்று தெரிவித்துள்ளார். 

மேலும், இரு நாட்டுத் தலைவர்களும், புத்தாண்டு வாழ்த்துகளை போன் மூலமே பறிமாறிக்கொண்டனர். சர்வதேச அரசியல் வட்டாரத்தில், உலகின் முக்கியமான இரண்டு தேசத் தலைவர்கள் தொலைபேசிமூலம் பேசியது, முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 
 


[X] Close

[X] Close