ஆஃப்கானிஸ்தானில் தற்கொலைப்படைத் தாக்குதல்..! 10 பேர் பலி | Bomb blast in Kabul: 10 killed

வெளியிடப்பட்ட நேரம்: 09:44 (05/01/2018)

கடைசி தொடர்பு:12:38 (05/01/2018)

ஆஃப்கானிஸ்தானில் தற்கொலைப்படைத் தாக்குதல்..! 10 பேர் பலி

காபூலில் பாதுகாப்புப் படையினர்மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியதில் 10 பேர் உயிரிழந்தனர். 

சமீபகாலமாக, ஆஃப்கானிஸ்தானில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துவருவதால், அதைத் தடுக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், நேற்று காபூலில் பாதுகாப்புப் படையினர், போதைப்பொருள் கும்பலைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாதுகாப்புப் படையினர்மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தியவர், ராணுவ வீரர் போல உடையணிந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை.