அமெரிக்காவை ஸ்தம்பிக்க வைத்த பனிப்பொழிவு சூறாவளி #BombCyclone

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியை ’பாம்’ பனிபுயல் திக்குமுக்காட வைத்துள்ளது.

bomb cyclone
 

பாம் பனிப்புயல், ‘bombogenesis’ என்னும் தட்பவெட்ப நிகழ்வால் ஏற்படும் இயற்கைச் சீற்றம் ஆகும். பெரும்பாலும் பனிக்காலத்தில் உருவாகும் இந்தப் புயல், கடலோரப்பகுதியில் சூறாவளிக் காற்றுடன் பனிப்பொழிவையும் ஏற்படுத்தும்.  


கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மெக்ஸிகோ வளைகுடாவில் உருவான இப்புயல், முதலில் புளோரிடாவைத் தாக்கியது. தற்போது அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியைப் புரட்டிப் போட்டுவிட்டது. சில பகுதிகளில் பனிப்பொழிவால் 43 சென்டிமீட்டர் உயரத்துக்கு பனிக்குவியல்கள் சாலையை மூடியுள்ளது. மேலும் கலிஃபோர்னியாவில் பனிப்புயலில் சிக்கி இதுவரை 4 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

shark]

Picture Courtesy - Atlantic whiteshark

பனிப்புயல் வீசி வரும் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிவிட்டது. நியூ ஜெர்சி, போஸ்டான், நியு யார்க் உள்ளிட்ட நகரங்களில் 4,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடல் வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குகின்றன. கடந்த 30 ஆண்டுகளில் இதுபோன்ற பனிப்புயல் வீசுவது இதுவே முதல்முறை. இந்தப் பனிப்புயலின் தாக்கம் படிப்படியாகக் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!