வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (05/01/2018)

கடைசி தொடர்பு:15:35 (05/01/2018)

பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு உதவிகள் வழங்கப்படாது..! அமெரிக்கா அறிவிப்பு

தீவிரவாதிகளை ஒடுக்காதவரை பாகிஸ்தானுக்கு நிதி உதவிகள் வழங்கப்படாது என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. 

கடந்த சில நாள்களுக்கு முன்னர், 'பாகிஸ்தானுக்கு, நீண்ட காலமாக அமெரிக்கா பாதுகாப்பு உதவிகளைச் செய்துவருகிறது. ஆனால், பாகிஸ்தான் அமெரிக்காவை ஏமாற்றியுள்ளது என்று டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதையடுத்து, 2016-ம் ஆண்டுக்கான வெளிநாட்டுக்கான 1,600 கோடி ரூபாய் நிறுத்தப்பட்டது. இந்த விவகாரம் குறித்துப் பேசிய அமெரிக்கச் செய்தித்தொடர்பாளர் ஹெதர் நியூவர்ட், 'பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுவந்த பாதுகாப்பு உதவிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன.

அனைத்து தீவிரவாத குழுக்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் தலிபான்கள், ஹக்கானி தீவிரவாதக் குழுக்கள்மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்த பிறகே பாதுகாப்பு உதவிகள் வழங்குவதுகுறித்து ஆலோசனை செய்யப்படும். 2017-ம் ஆண்டு வழங்கக் கூடிய நட்பு நாடுகளுக்கான நிதி உதவி 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவியையும் பாதுகாப்புத்துறை தற்போது நிறுத்திவைத்துள்ளது' என்று தெரிவித்தார்.