'கோல்டன் க்ளோப்ஸ்' விழாவில் வெடிக்கப்போகும் `கறுப்பு உடை' புரட்சி!

உலகப் புகழ்பெற்ற 'கோல்டன் க்ளோப்ஸ்' விருது வழங்கும் விழாவில், கறுப்பு உடை அணிந்து கலந்துகொள்ளப்போவதாக, ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சாவுர்ஸ் ரோனன் தெரிவித்துள்ளார். 

Saoirse Ronan

ஹாலிவுட்டில், பெண்களுக்கு எதிராக நடந்துவரும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராகப் பல முன்னணி நடிகைகள் குரல்கொடுத்து வருகின்றனர். இது, அமெரிக்க அளவிலும் உலக அளவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. பல நடிகைகள், தாங்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறோம் என்று பொதுத்தளத்தில் சொல்லிவருவது ஹாலிவுட்டில் திரை மறைவில் நடக்கும் விரும்பத்தகாத விஷயத்தில் வெளிச்சம்பாய்ச்சிவருகிறது. இதற்கு எதிராகக் குரல்கொடுக்கும் நோக்கில்தான், உலகப் புகழ்பெற்ற விருது வழங்கும் விழாவான கோல்டன் க்ளோப்ஸில், பல நடிகைகள் கறுப்பு உடை அணிந்து வரப்போவதாகத் தெரிவித்துவருகின்றனர். 

இதுகுறித்து பேசிய ரோனன், `என்னையும் சேர்த்து பல நடிகைகள், இந்த ஆண்டு 'கோல்டன் க்ளோப்ஸ்' விருது விழாவில் கறுப்பு உடைதான் அணிய உள்ளோம். ஹாலிவுட்டில் நடக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக, என்னால் முடிந்த வகையில் குரல் கொடுப்பதும் விழிப்புஉணர்வு ஏற்படுத்துவதும் மிகவும் முக்கியமான விஷயம் என்று கருதுகிறேன்' என கருத்து கூறியுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!