“தமிழக மக்களை நன்றாக வாழ வைப்பதே அதிகபட்ச ஆசை”! மலேசிய விழாவில் ரஜினி நெகிழ்ச்சி | To give a Happy Life to Tamilnadu People is my Dream Says Actor Rajinikanth

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (07/01/2018)

கடைசி தொடர்பு:07:30 (07/01/2018)

“தமிழக மக்களை நன்றாக வாழ வைப்பதே அதிகபட்ச ஆசை”! மலேசிய விழாவில் ரஜினி நெகிழ்ச்சி

சென்னை தி.நகரில் உள்ள இடத்தில்  தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. சிறிய திரையரங்கம், உடற்பயிற்சி, நடிப்புப் பயிற்சி கூடங்கள், உறுப்பினர்களுக்கான அறைகளுடன் இந்தக் கட்டடம் கட்டப்படுகிறது. 

ரஜினி

நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்காக நிதி திரட்டப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக சினிமா பிரபலங்கள் கலந்து கொண்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. மேலும் நட்சத்திர கலை விழாக்கள் நடத்தப்பட்டு நிதி திரட்டப்படும் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் அறிவித்து இருந்தனர்.
நடிகர் சங்க கட்டடத்துக்கு நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் நட்சத்திர கலை விழா நடைபெற்று வருகிறது. இதில் தமிழ் திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். 

அரசியலுக்கு வரப்போவதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். கமல்ஹாசனும் அரசியல் களத்தில் நுழைவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் மலேசியாவில் சந்தித்துப் பேசினார்கள். நட்சத்திர கலைவிழாவின் போது இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அரசியலில் ஈடுபடுவதற்கான முயற்சிகளில் இருவரும் இருக்கும் நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகிறது.

கலைநிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, “என்னை வாழ வைத்த தமிழக மக்களை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை. எனக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். சின்ன வயதில் நான் வேகப்பந்து வீச்சாளராக இருந்தேன். பட்டோடி எனக்குப்பிடித்த வீரராக இருந்தார். இப்போதைய இந்திய வீரர்கள் தோனியை எனக்குப் பிடிக்கும். ஆனால், எப்போதும் எனக்குப் பிடித்த வீரர் சச்சின் டெண்டுல்கர் தான்” என்றார்.