`பதற்றம் தணியும்...' - கொரிய நாடுகளின் பேச்சுவார்த்தைகுறித்து ரஷ்யா கருத்து! | We welcome the first contacts between Seoul and Pyongyang, Russia

வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (08/01/2018)

கடைசி தொடர்பு:09:51 (08/01/2018)

`பதற்றம் தணியும்...' - கொரிய நாடுகளின் பேச்சுவார்த்தைகுறித்து ரஷ்யா கருத்து!

கடந்த  ஓர் ஆண்டுக்கும் மேலாக, வடகொரியாவின் அபரிமிதமான அணு ஆயுதச் சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. இதனால், இரு நாடுகளுக்கும் போர் வெடிக்கக்கூடும் என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் இருந்துவந்தது. இந்நிலையில், இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதை ரஷ்யா வரவேற்றுள்ளது.

கொரிய தீபகற்பம்

வரும் பிப்ரவரி மாதம், தென்கொரியாவில் இருக்கும் பியோங்சங்கில், வின்டர் ஒலிம்பிக்ஸ் நடக்க உள்ள நிலையில், வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தென்கொரியா விருப்பம் தெரிவித்திருந்தது. இந்தப் பேச்சுவார்த்தை, அடுத்த வாரம் வடகொரியாவில் நடக்க உள்ளது. வின்டர் ஒலிம்பிக்ஸில் வடகொரியா கலந்துகொள்ளுமா இல்லையா என்பதுதான் இந்தப் பேச்சுவார்த்தையின் சாரமாக இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. தென்கொரியா, அமைதி நோக்கி ஓர் அடி எடுத்த நிலையில், வடகொரியா மற்றொரு அடி எடுத்துவைத்துள்ளது. 

இதுகுறித்து ரஷ்யா, `தென் கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடக்கப்போவது வரவேற்கத்தக்கது. இரு நாட்டினரும் நேரடியாக இதைப் போன்ற சுமுகப் பேச்சுவார்த்தையில் இறங்குவது, கொரிய தீபகற்பத்தில் வெகு நாள்களாக நிலவிவரும் பதற்றத்தைத் தணிக்க உதவும்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.


அதிகம் படித்தவை