வெளியிடப்பட்ட நேரம்: 15:47 (10/01/2018)

கடைசி தொடர்பு:16:13 (10/01/2018)

உறைந்துபோன நயாகரா ; பனிப்போர்வை போர்த்திய சகாரா! - பிரமிக்க வைக்கும் வானிலை நிகழ்வுகள்

கடுங்குளிரில் நடுங்கும் வடஅமெரிக்கா, சுட்டெரிக்கும் வெப்ப அலையில் தவிக்கும் சிட்னி, கன மழை, திடீர் வெள்ளத்தால் மிதக்கும் சிங்கப்பூர்... இந்த வரிசையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பனிப்போர்வையால் மூழ்கியுள்ளது சகாரா பாலைவனம். 

sahara

Sahara Desert


காலநிலை மாற்றங்களால் வெயில், பனி, மழை என எந்த வானிலை நிகழ்வாக இருந்தாலும் சற்று தீவிரமாகவே இருக்கிறது. வங்கதேசம், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் தற்போது வரலாறு காணாத பனிப்பொழிவு நிலவி வருவதே இதற்கு உதாரணம். 

பூமியின் வளிமண்டலமும் பெருங்கடலும் வெப்பமடைவதால், வெப்பக்காற்றில் அதிக ஈரப்பதம் கலக்கிறது. இதன் விளைவாக மழையும் பனியும் புதிய உச்சங்களைத் தொடுகின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் `காலநிலை மாற்றம் வானிலைக்கு கூடுதல் `கிக்’ (kick ) கொடுத்து வளிமண்டல சுழற்சியைப் பாதிக்கிறது.

 

 

எது எப்படியோ ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு ரசிக்க வைக்கும் நிகழ்வாக உள்ளது. 1979-ம் ஆண்டு கடைசியாக அங்கு பனிமழை பொழிந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு, கடந்த 2016ல் மிதமான பனிப்பொழிவு நிகழ்ந்தது. கடந்த ஒரு வாரமாகப் பனிப்பொழிவு அதிகரித்து, பாலைவன சிவப்பு மணலின் மீது அழகாக வெள்ளைப் படலம் படர்ந்திருக்கிறது. இந்தக் காட்சியைச் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்து பகிர்ந்து வருகின்றனர். 

இதே போன்று கடந்த சில வாரங்களுக்கு முன் உலகின் எழில் கொஞ்சும் பேரருவிகளில் ஒன்றான நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி, பனியில் உறைந்தது. பனிக் குவியல்கள், வெண்மை போர்த்திய மரங்கள் என நயாகராவின் அழகைக் கண்டுகளிக்க சுற்றுலாவாசிகள் அங்கு குவிந்தனர்.

 நயாகரா

Niagara Falls

 பசுமை இல்ல வாயுக்கள் வளிமண்டலத்தில் கலப்பதால் நாளுக்கு நாள் புவி வெப்பமடைந்து வருகிறது. இது நீடித்தால் வானிலை நிகழ்வுகள் இன்னும் தீவிரம் காட்டும். 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க