தமிழில் 'வணக்கம்' சொல்லி பொங்கல் வாழ்த்து கூறிய பிரிட்டன் பிரதமர்! | UK PM Theresa May Shares Pongal Wishes

வெளியிடப்பட்ட நேரம்: 18:01 (14/01/2018)

கடைசி தொடர்பு:18:01 (14/01/2018)

தமிழில் 'வணக்கம்' சொல்லி பொங்கல் வாழ்த்து கூறிய பிரிட்டன் பிரதமர்!

பிரிட்டன் பிரதமர் தெரசா மே தமிழில் வணக்கம் சொல்லி பொங்கல் வாழ்த்து தெரிவித்திருப்பது தமிழர்களைக் கவர்ந்திருக்கிறது.

May

 

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இதையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ள வாழ்த்து அனைவரையும் கவர்ந்துள்ளது.

தெரசா மே தன் ட்விட்டர் பக்கத்தில்  பொங்கல் வாழ்த்து சொல்லும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அவர் பேச ஆரம்பிக்கும் முன்பு தமிழில் 'வணக்கம்' சொல்கிறார். பிரிட்டனில் மற்றும் உலகமெங்கும் வசிக்கும் தமிழர்களுக்கு அவர் தன் வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, அவர்களின் பிரிட்டனின் வளர்ச்சிக்கு மிகுந்தப் பங்காற்றியுள்ளனர் என்றும் புகழ்ந்துள்ளார். தமிழர்களால் தாங்கள் பெருமிதப்படுவதாகவும் வரும் ஆண்டு அவர்களுக்குச் சிறப்பாக அமையட்டும் என்றும் தெரசா மே தன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடுகிறார். பொங்கல் பண்டிகைக்கு  உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவிப்பது நமக்கு பெருமையான விஷயமாகும்; இது நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் வெளிநாட்டவர்கள் எவ்வளவு உயர்வாகப் புரிந்து வைத்துள்ளனர் என்பதை உணர்த்துகிறது. தெரசா மேயின் பொங்கல் வாழ்த்து வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.