வெளியிடப்பட்ட நேரம்: 04:55 (15/01/2018)

கடைசி தொடர்பு:10:28 (15/01/2018)

ஓடுதளத்திலிருந்து விலகிய விமானம்..! அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்

துருக்கி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம், ஓடுதளத்திலிருந்து விலகி பள்ளத்தில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பெரும் உயிரிழப்பு ஏற்படவில்லை.

துருக்கி நாட்டு தலைநகர் அங்காராவிலிருந்து டிராப்சான் நகருக்கு விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த விமானத்தில் 162 பயணிகளும், 2 பைலட்களும், 4 விமான நிலைய ஊழியர்களும் பயணம்செய்தனர்.

டிராப்சன் நகரை அடைந்த விமானம், ஓடுதளத்தில் தரையிறங்கியது. அப்போது, அங்கு மழை பெய்துகொண்டிருந்தது. அதனால், கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுதளத்தைவிட்டு விலகி ஓடியது. அருகிலிருந்த பள்ளத்தில் சரிந்துவிழுந்தது. 
இதில் அதிர்ஷ்டவசமாக 162 பயணிகளும் உயிர் தப்பினர். சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்துசென்ற விமான நிறுவன அதிகாரிகள், காயமடைந்த பயணிகளை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விமான நிலையத்தின் ஓடுதளம், கருங்கடல் பகுதி கடற்கரையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.