வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (18/01/2018)

கடைசி தொடர்பு:07:53 (18/01/2018)

நைஜீரியாவில் தீவிரவாதத் தாக்குதல்; 12 பேர் பலி

நைஜீரியாவில், போகோஹராம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், போகோஹராம் தீவிரவாதிகள் குழு இயங்கிவருகிறது. நைஜீரியா மட்டுமல்லாது, அண்டை நாடுகளிலும் இந்தக் குழு பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்நிலையில், நைஜீரியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மைதுகுரி பகுதியில் உள்ள மார்கெட்டில், நேற்று இரண்டு தீவிரவாதிகள் தங்களது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தனர்.

இந்த கோரத் தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி பலியாகினர். 48 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.