12 நிமிடத்துக்கு ஒரு குழந்தை! உலகின் பிஸியான மகப்பேறு மருத்துவமனை | Philippine's Dr Jose Fabella Memorial Hospital is very busiest hospital in the world

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (18/01/2018)

கடைசி தொடர்பு:18:40 (18/01/2018)

12 நிமிடத்துக்கு ஒரு குழந்தை! உலகின் பிஸியான மகப்பேறு மருத்துவமனை

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருக்கிறது டாக்டர் ஜோஸ் ஃபாபெல்லா நினைவு மருத்துவமனை. இந்த மருத்துவமனைதான் உலகில் அதிக பிரசவங்கள் நடைபெறும் மருத்துவமனையாகச் சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 

Hospital

Photo Credit: The Philippine Star‏

இந்த மருத்துவமனையில் சராசரியாக ஒரு நாளுக்கு சுமார் 100 குழந்தைகள் பிறக்கின்றன. குறைந்தது 60 குழந்தைகள் பிறக்காத நாளே இல்லை எனலாம். சராசரியாக 12 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு பிரசவம் இந்த மருத்துவமனையில் நிகழ்கிறது. பிரசவத்துக்காகத் தினமும் ஏராளமான பெண்கள் மருத்துவமனை நோக்கி வருவதால், மகப்பேறு பிரிவு கர்ப்பிணி பெண்களால் நிரம்பி வழிகிறது. ஒரு படுக்கையை 5 பேர் பகிர்ந்துகொள்கிறார்கள். இதனால் அங்கு எப்போதும் நெருக்கடி அதிகமாக இருக்கிறது. பிரசவத்துக்காக அனுமதிக்கப்படும் பெண்களில் பலர் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுதான் வருத்தமளிக்கும் விஷயமாகும்.

பிலிப்பைன்ஸ் ஒரு கிறிஸ்துவ நாடு. அங்கு கருக்கலைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. பதின்பருவத்தில் பெண்கள் கர்ப்பம் அடையும் நாடுகள் பட்டியலில் ஆசியாவிலேயே பிலிப்பைன்ஸ் முதலிடத்தில் இருக்கிறது. இதைத் தவிர்க்க பிலிப்பைன்ஸ் அரசு முயற்சி மேற்கொண்டுவருகிறது.