அலாஸ்காவை உலுக்கிய நிலநடுக்கம்! - நள்ளிரவில் ஒலித்த எச்சரிக்கை மணியால் பதறிய மக்கள்

alaska

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் அருகே கடலுக்கு அடியில் 8.2 ரிக்டர் அளவில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. 

tsunami
 

இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ‘கொடியகத்தின் (Kodiak) தென்கிழக்கே 280 கி.மீ தொலைவில் 25 கி.மீ ஆழத்தில் 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்க தேசிய வானிலை மையம் கொலம்பியா, அலாஸ்காவின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொடியக் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது அங்கு நள்ளிரவு 2.30 மணி. நள்ளிரவில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த கொடியக் பகுதி மக்கள் சுனாமி எச்சரிக்கை ஒலி எழுந்ததும் பதறியடித்து வீதிகளுக்கு வந்துள்ளனர்.  

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!