பதபதைக்க வைத்த தீ விபத்து- 41 நோயாளிகள் பலியான சோகம்

தென்கொரியாவில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் நோயாளிகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

south korea

தென்கொரியாவின் மிர்யாங் நகரில் உள்ள சேஜாங் மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சை அறையில் இன்று காலை திடீரென தீ பற்றியது. சற்று நேரத்தில் மருத்துவமனையின் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் செய்வதறியாது தவித்த காட்சிகள் மனதை பதபதைக்க வைக்கின்றன. விபத்து ஏற்பட்ட நேரத்தில் அங்கு 200 பேர் வரை இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

south korea

இந்த விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் இன்னும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனையில் போதுமான தீயணைப்பு உபகரணங்கள் இல்லாததே உயிரிழப்புகளுக்குக் காரணம் என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!