வெளியிடப்பட்ட நேரம்: 06:40 (27/01/2018)

கடைசி தொடர்பு:18:56 (27/01/2018)

தென் கொரியாவில் தீ விபத்து... 37 பேர் பலி

தென்கொரியாவிலுள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 37 பேர் உயரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். 

தென்கொரியா நாட்டின் மிர்யாங் நகரில் உள்ள சேஜாங் மருத்துவமனையில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இங்குள்ள 6 அடுக்குகள் கொண்ட கட்டடத்தில் மருத்துவமனை மற்றும் ஒரு நர்சிங் ஹோம் இயங்கி வந்தது. இதய நோய் சிகிச்சை அறையில் பற்றிய தீயானது மருத்துவமனையின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியது. விபத்து ஏற்பட்ட நேரத்தில் அங்கு 200 பேர் வரை இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மருத்துவமனை தீ விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 130-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பல மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.