குடியேற்றக் கொள்கையில் சீர்திருத்தம்! ட்ரம்ப் அழைப்பு

trump

அமெரிக்க மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஹச்1பி விசாவில் திருத்தம், அந்நிய நாட்டவர்களுக்கு கட்டுப்பாடு என ஏராளமான கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முயன்று வருகிறார். இதற்கு சுந்தர் பிச்சை, மார்க் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்புக்கனைகளை வீசினர். மேலும், அமெரிக்கா புலம்பெயர்ந்தவர்களால் கட்டமைக்கப்பட்டது என தொடர்ந்து அவர்கள் குரல் எழுப்பிவருகின்றனர். சிலிக்கன் வேலி சி.இ.ஓ-க்களின் இந்த  எதிர்ப்பு காரணமாக ட்ரம்ப் அமைதி காத்துவருகிறார்.  இந்தநிலையில், அமெரிக்க தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் குடியேற்றத்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் அமெரிக்க மக்களைப் பாதுகாக்கும் இந்தக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்றும் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். 

இதுகுறித்து நேற்று ட்ரம்ப் பேசியபோது, ``இந்தக் குடியேற்றத்துறை சீர்திருத்தம் ஆனது அமெரிக்க மக்களைப் பாதுகாக்கும் விதத்திலும் அதே வேளையில் ஏற்கெனவே குடியேறிய மக்களுக்கு உதவும் வகையிலும் இருக்கும். பழைய குடியேற்றக் கொள்கை மூலம் லட்சக்கணக்கில் குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் ஊழியர்களை அனுமதித்து அப்பாவி ஏழை அமெரிக்கர்களின் வாழ்வு நசுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கொள்கையால் நாட்டில் போதைமருந்து கடத்தல் கும்பல் ஆதிக்கமும் அதிகரித்துள்ளது. எனவே, நமது மக்களைப் பாதுகாக்க இந்தப் புதிய சீர்திருத்தங்களைக் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆதரிக்க வேண்டும்'' என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!