`அணு ஆயுதத்தை எப்போதும் பயன்படுத்த வேண்டிய தேவை வராது என நம்புவோம்!' - ட்ரம்ப் பேச்சு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அதிபராக பதவியேற்று ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தனது `ஸ்டேட் ஆஃப் தி யூனியன்' உரையை ஆற்றியுள்ளார்.

ட்ரம்ப்

அப்போது அவர், `அமெரிக்காவின் பலத்தையும் தன்னம்பிக்கையும் நமது சொந்த நாட்டில் நாம் மீட்டுருவாக்கம் செய்து கொண்டிருக்கும்போது, வெளிநாடுகளிலும் நமது இருப்பைத் தக்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உலகத்தின் பல்வேறு இடங்களில் மிக மோசமான ஆட்சிகளைப் பார்த்து வருகிறோம். தீவிரவாத அமைப்புகள், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் நமது பொருளாதாரத்துக்கும் பிற காரணங்களுக்கும் போட்டியாக இருக்கின்றன. நமது பாதுகாப்பை அதிகரிக்க, அணு ஆயுதங்களை நவீனப்படுத்துவது முக்கியம். அப்படி செய்தாலும் அணு ஆயுதங்களை நாம் எப்போதும் பயன்படுத்தத் தேவை வராது என்று நம்புவோம். அவைகளைப் பலப்படுத்துவதன் மூலம் நமது பாதுகாப்பை உறுதி செய்துகொள்வோம். ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக நமது தாக்குதல் தொடர்ந்து நடக்கும். அவர்கள் அழிக்கப்படும் வரை தாக்குதல் தொடர்ந்து நடத்தப்படும்' என்று பேசியுள்ளார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!