ஆஃப்கானிஸ்தானில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம்... டெல்லியிலும் தாக்கம்!

ஆஃப்கானிஸ்தான் நாட்டின், ஹிந்து குஷ் பகுதியில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய- மெடிட்டரேனியன் நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி மற்றும் காஷ்மீரில் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக, காஷ்மீரில் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. 

நிலநடுக்கம்

இது குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள், `6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இதனால் பலோசிஸ்தான் லேஸ்பெலா பகுதியில் பலர் காயமடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்' என்று தெரிவித்துள்ளது. இந்தியாவின் வட மேற்குப் பகுதியில் மட்டுமே இந்த நிலநடுக்கம் லேசான அளவில் உணரப்பட்டுள்ளது. அதனால், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தெரிகிறது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!