“ஐ.எஸ் பயங்கரவாதிகளைத் தோற்கடிக்கும்வரை அமெரிக்கா போராடும்” - ட்ரம்ப் உறுதி

டிரம்ப்

“ஐ.எஸ் பயங்கரவாதிகளைத் தோற்கடிக்கும்வரை அமெரிக்கா தொடர்ந்து போராடும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக்குழுத் தொடரில் பேசிய ட்ரம்ப்,  “மக்களின் நன்மைக்காக கருத்து வேறுபாடுகளை மறந்து எதிர்க்கட்சிகள் இணைந்து பணியாற்ற வேண்டும். மக்களுக்காக, அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றிக்காட்டுவேன். தங்களுக்குப் பணியாற்றுவதற்காகவே மக்கள் நம்மைத் தேர்வுசெய்துள்ளனர். 20.40 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை எனது நிர்வாகம் உருவாக்கியுள்ளது. தகுதி அடிப்படையிலான குடியேற்ற முறையை அறிமுகம் செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது. திறமையான நமது சமூகத்துக்குத் தனது பங்களிப்பை அளிக்கக்கூடிய, நாட்டுக்கு மரியாதை அளித்து நேசிக்கக்கூடிய மக்களுக்கு மட்டுமே க்ரீன் கார்டு வழங்கப்படும். அவர்களே இந்த நாட்டுக்குத் தேவை. ஐ.எஸ் பயங்கரவாதிகளைத் தோற்கடிக்கும்வரை அமெரிக்கா தொடர்ந்து போராடும். 

அமெரிக்காவைப் பலமும் நம்பிக்கையும் பொருந்திய நாடாக மாற்றியமைப்போம். உலகளவில் பயங்கரவாத அமைப்புகள், சீனா மற்றும் ரஷ்யா போன்ற எதிரிகள், நமது பொருளாதாரம் மற்றும் தனித்தன்மைக்குச் சவால் விடுவதாக உள்ளனர். பயங்கரவாதிகள் கிரிமினல்கள் அல்ல... சட்டவிரோதமான எதிரிகள். அவர்கள், உலகம் முழுவதையும் கைப்பற்றுவதற்குள் அவர்களைப் பயங்கரவாதிகளாகவே கருதி அழிக்க வேண்டும். வட கொரியாவில் சர்வாதிகாரத்தைவிடக் கொடூரமான ஆட்சி நடக்கிறது. அவர்கள், அணு ஆயுதங்களைக்கொண்டு நமது நாட்டை மிரட்ட முயல்கிறார்கள். அப்படி நடப்பதற்குள் நாம் அவர்களுக்கு அதிகப்படியாக நெருக்கடிகளைக் கொடுக்க வேண்டும். அவர்களை ஒடுக்க வேண்டும்” என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!