புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை!

கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும்  புரட்சியாளருமான ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன்  டியஸ் பலர்ட் தற்கொலை செய்து கொண்ட செய்தி அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஃபிடல்
டியஸ் பலர்ட்

மறைந்த கியூபாவின் முன்னாள்  அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் முதல் மனைவிக்குப் பிறந்த ஒரே மகன்  டியஸ் பலர்ட். 68 வயதான இவரை அனைவரும் ‘Fidelito’ என்று அழைப்பார்கள். 'லிட்டில் பிடல்' என்றும் செல்லமாக அழைப்பார்கள். இவர் நிறைய புத்தகங்களை எழுதியுள்ளார். கடந்த சில மாதங்களாகவே டியஸ் பலர்ட் மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், வியாழன் (1-2-2018) அன்று டியஸ் பலர்ட் தற்கொலை செய்துகொண்டதாக கியூபா ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!