வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (02/02/2018)

கடைசி தொடர்பு:17:00 (02/02/2018)

சீனாவில் 1.3 கோடி பேருக்கு வறுமையிலிருந்து விடுதலை!

சீனாவில், 2017-ம் ஆண்டு 1.29 கோடி பேரின் வாழ்க்கைத் தரம் வறுமைக்கோட்டுக்கு மேலான நிலைக்கு உயர்ந்துள்ளது.
 

வறுமை

 

சீனாவைப் பொறுத்தவரை ஆண்டுக்கு 2,300 யுவான் வருமானம் இல்லாதவர்கள், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, சீன அரசு தீவிர முயற்சிகள் எடுத்துவருகிறது. 2012-ம் ஆண்டிலிருந்து 2017-ம் ஆண்டுவரை சீனாவில் 6.85 கோடி பேரின் வாழ்க்கைத் தரம் வறுமைக்கோட்டுக்கு மேல் உயர்ந்துள்ளது. என்றாலும், இன்னும் 3 கோடி பேர் சீனாவில் வறுமையில் வாடுகிறார்கள். 2020-ம் ஆண்டுக்குள் வறுமையை ஒழிக்க சீனா இலக்கு நிர்ணயித்துள்ளது. 

கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கவும் புதிய திட்டங்களைச் செயல்படுத்த சீன அரசு  திட்டமிட்டுள்ளது. அதில், சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுலாவை ஊக்குவிப்பதும் ஒன்றாகும். அரசுத் துறைகளில் ஊழல் மலிந்திருப்பதும், மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே  வாழக் காரணமாக இருக்கிறது. ஆகவே, ஊழலை ஒட்டுமொத்தமாக துடைத்தெடுக்கவும், ஊழல் அதிகாரிகளைக் கடுமையாகத் தண்டிக்கவும் சீன அரசு முடிவுசெய்துள்ளது. சீன அரசின் ஊடகமான 'ஜின்குவா', இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.