வெளியிடப்பட்ட நேரம்: 11:28 (04/02/2018)

கடைசி தொடர்பு:11:28 (04/02/2018)

பாட மறுத்ததால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட பாடகி!

பாகிஸ்தானைச் சேர்ந்த சும்புல் கான் என்ற பாடகியை, தங்களது பார்ட்டியில் பாடச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளது கும்பல் ஒன்று. அவர்களது விருப்பத்துக்கு செவி மடுக்காததால் பாடகி சும்புல் கானை சரமாரியாக சுட்டுக் கொன்றுள்ளனர்.

shot dead

இது குறித்து பாகிஸ்தான் போலீஸ் தரப்பு, `25 வயது நிரம்பியவர் பாடகி சும்புல் கான். இவர் பாகிஸ்தானில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து புகழ்பெற்றவர். நடிகரும் பாடகருமான சும்புல் கானை மூன்று பேர் கொண்ட கும்பல், தங்களது பார்ட்டியில் பாடச் சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளது. அவர்கள் பல முறை கேட்டும் பாட சம்மதிக்காததால், சும்புல் கானை சரமாரியாக சுட்டுக் கொன்றுள்ளது அந்தக் கும்பல்' என்று விளக்கம் அளித்துள்ளது. இதுவரை சும்புல் கானை கொன்றவர்களில் யாரும் பிடிபடாத நிலையில், தீவிர விசாரணை நடத்து வருகிறது பாகிஸ்தான் போலீஸ்.