வெளியிடப்பட்ட நேரம்: 21:23 (04/02/2018)

கடைசி தொடர்பு:21:23 (04/02/2018)

மெக்ஸிகோ எல்லை விபரீதம்... எல்லைமீறும் பாதுகாப்பு வீரர்கள்!

எல்லை

மெட்ராஸ் படத்துல செவுரு காவு வாங்கணும்னு ஒரு காட்சியமைப்பு இருக்கும் ஆனா அதுக்கு பின்னாடி பெரிய அரசியல் இருக்கும். அதே மாதிரி ஒரு அரசியல் தான் இப்ப அமெரிக்கா- மெக்ஸிகோ எல்லைலயும் நடந்துட்டு இருக்கு. அதிபர் ட்ரம்ப்போட தேர்தல் பிரசாரத்தில் பிரதானமா முன் வைக்கப்பட்ட விஷயம் ''மெக்ஸிகோ சுவர்'' 

சட்டவிரோதமா அமெரிக்காவுக்குள்ள நுழையறவங்கள தடுக்கணும். அதுக்காக மெக்ஸிகோ - அமெரிக்கா எல்லைல சுவர் கட்டணும்னு ட்ரம்ப் சொல்லிக்கொண்டே இருக்கிறார். ட்ரம்ப் பதவியேற்று ஒரு வருஷம் ஆகிடுச்சு ஆனா இன்னும் ஒரு செங்கல் கூட வாங்கவில்லை. இந்நிலையில் எல்லையில் புதிய பிரச்னை ஒன்று உருவாகியுள்ளது. செவுரு கட்ட ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே காவு வாங்க ஆரம்பிக்க போகுதுனு ஒரு அபாயக்குரல் ஒலிக்க துவங்கியுள்ளது. 

 

 

அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் இருக்கும் பாலைவனம் தான் அரிசோனா பாலைவனம். இந்த பாலைவனத்தை கடந்து தான் அமெரிக்காவுக்குள் வரவோ அல்லது வெளியேறவோ முடியும். எல்லையில் பாலைவனத்தை கடப்பவர்கள் அருந்துவதற்காக தண்ணீர் கேலன்கள் வழங்கப்பட வேண்டும் என்பது அமெரிக்க அரசின் உத்தரவு. ஆனால் அதில் தான் பிரச்னை ஆரம்பித்தது. தண்ணீர் கேலன்களை பாதுகாப்பு படை வீரர்கள் கால்களால் உதைத்து கொட்டி விடுகின்றனர் என்ற புகாரை புலம்பெயர்பவர்கள் முன் வைக்கிறார்கள். ஒரு நபருக்கு 11 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும் என்பது தான் சட்டம். ஆனால் இங்கே 4 லிட்டர்கள் கூட முழுமையாக கிடைப்பதில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள் பயணிகள்.

தண்ணீர் கேலன்கள்800 சதுர மைல் பரப்பளவுள்ள இந்த பாலைவனத்தில் கடந்த ஆண்டு மட்டும் 415 முறை தண்ணீர் கேலன்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி உணவு பொட்டலங்களும், போர்வைகளும் சேதப்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது குறித்து பாலைவனத்தை கடப்ப்பவர்கள் '' ட்ரம்ப் பதவியேற்றதற்கு பின்பு எல்லையில் பாதுகாப்பு வீரர்களின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது. நிறவெறி தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. ட்ரம்ப் அரசு மேலும் 5000 எல்லை பாதுகாப்பு வீரர்களை பணியமர்த்தவுள்ளது. ஆனால் எல்லையில் முறைகேடாக நடக்கும் கஞ்சா விற்பனைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அது இன்னும் மக்களை பயமூட்டும் விஷயமாக மாறியுள்ளது என்கின்றனர்.

இந்த விஷயத்துக்கு விளக்கமளித்துள்ள அமெரிக்க எல்லை பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர்  ஸ்டீவ் கூறும் போது '' அமெரிக்க வீரர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடவில்லை. வெளியாகியுள்ள வீடியோக்கள் குறித்து விசாரனை நடத்தப்படும். அப்ப்டி நடந்திருந்தால் யார் என கண்டறிந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த எல்லை விஷயத்தில் யாருமே இறக்கவில்லை என்று தான் இது நாள் வரை கூறப்பட்டு வந்தது. ஆனால் பாலைவனத்தில் எழும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளது. அவை பற்களுடன் இருப்பது அவற்றின் வயதை கண்டறிய எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இறப்பு குறித்த தகவல்கள் முழுமையாக இல்லாவிட்டாலும் நூற்றுக்கணக்கான மக்கள் காணாமல் போயியுள்ளனராம். மெக்ஸிகோ வழியே மக்கள் அமெரிக்காவுக்கு நுழைவதை ட்ரம்ப் அடியோடு விரும்பவில்லை. அமெரிக்கா அமெரிக்கர்களுக்கான நாடு என்பதில் திடமாக இருக்கிறார். அதன் எதிர்மறை வெளிப்பாடு தான் இந்த எல்லை பிரச்னை. ட்ரம்ப் ஒரு விஷயத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். அமெரிக்கா புலம் பெயர்ந்தவர்களால் உருவான நாடு. ஒரு உயிர் போனால் கூட  அது மனித நேயமற்ற செயல் தான். சுவர் என்பது பாதுகாப்புக்கானதே தவிர பிரிவினைக்கானது அல்ல. 
 


டிரெண்டிங் @ விகடன்