’மாலத்தீவில் முற்றும் அரசியல் குழப்பம்’ - தலைமை நீதிபதியும் கைது!

மாலத்தீவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா சையது மற்றும் நீதிபதி அலி ஹமீது ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

மாலத்தீவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை விடுவிக்க, அந்நாட்டு உச்ச நீதிமன்றம்  சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் தனது அதிகார வரம்பை மீறி செயல்படுவதாகக் கூறி, அந்த உத்தரவை அதிபர் அப்துல்லா யாமீன் அமல்படுத்த மறுத்துவிட்டார். அதேபோல, ஆளுங்கட்சியைச் சேர்ந்த 12 பேர் அதிபருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கவே, ஆட்சிக் கவிழ்ப்பைத் தடுக்கும் நோக்கில் அவர்களைத் தகுதிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, மாலத்தீவில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி, அதிபர் அப்துல் யாமீன் நேற்று (5.2.2018) உத்தரவிட்டார். அவசரநிலை 15 நாள்கள் அமலில் இருக்கும் என்றும் அதிபர் அறிவித்திருந்தார். மாலத்தீவு நாடாளுமன்றமும் முடக்கப்பட்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. 

இந்த நிலையில், மாலத்தீவு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அப்துல்லா சையது மற்றும் நீதிபதி அலி ஹமீது ஆகியோர் அதிபரின் உத்தரவின்படி கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், முன்னாள் அதிபர் மாமூன் அப்துல் கயூம், நீதித்துறை நிர்வாக அதிகாரி ஆகியோரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனால், மாலத்தீவில் அரசியல் குழப்பம் அதிகரித்துள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!