வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (06/02/2018)

கடைசி தொடர்பு:15:20 (06/02/2018)

22 இந்தியர்களுடன் கடத்தப்பட்ட கப்பல்: நான்கு நாள்களுக்குப் பிறகு விடுவித்த கடற்கொள்ளையர்கள்

22 இந்திய மாலுமிகளுடன் கடந்த 1-ம் தேதி கடத்தப்பட்ட வணிகக் கப்பலை கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர். 

Photo: Maritime-Executive

மும்பையைத் தலைமை இடமாகக்கொண்டு இயங்கிவரும் 'Anglo Eastern shipping' நிறுவனத்தின் 'மரைன் எக்ஸ்பிரஸ்' என்ற வணிகக் கப்பல், மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா அருகே நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த 1-ம் தேதி இந்தக் கப்பல் மாயமானது. மாயமான கப்பலில் 13,500 டன் பெட்ரோலுடன், 22 இந்திய மாலுமிகள் சிக்கியிருந்தனர். விசாரணையில், கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திச்சென்றது தெரியவந்தது.  பின்னர், பெனின், நைஜீரிய அரசுகளின் உதவியுடன் கப்பலை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டிருந்தது.

இதனிடையே, 4 நாள்களுக்குப் பிறகு, கடற்கொள்ளையர்கள் கப்பலை விடுவித்துள்ளனர். இந்தத் தகவலை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதிசெய்துள்ளார். மேலும், 22 இந்தியர்களும் பத்திரமாக உள்ளதாக சுஷ்மா ஸ்வராஜ் தகவல் தெரிவித்துள்ளார். முன்னதாக, கப்பலை விடுவிக்க உதவிய பெனின் மற்றும் நைஜீரிய அரசுகளுக்கு சுஷ்மா ஸ்வராஜ் நன்றி தெரிவித்தார். இருப்பினும், கப்பலை விடுவிக்க பிணைத்தொகை ஏதும் அளிக்கப்பட்டதா என்பதுகுறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க