வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (11/02/2018)

கடைசி தொடர்பு:09:30 (11/02/2018)

இந்த ஆண்டின் டிரெண்ட் என்ன...?! நியூயார்க் ஃபேஷன் ஷோ 2018 அப்டேட்

பிப்ரவரியில் காதலர் தினம் மட்டுமில்ல ஃபேஷன் ஷோக்களும் களைகட்டும். கடந்த வாரம் இந்தியாவின் மாபெரும் ஃபேஷன் ஷோவான லேக்மீ ஃபேஷன் வீக் மும்பையில் நடைபெற்றது. ஷாஹித் கபூர், ஹன்சிகா, கரீனா கபூர், டாப்சீ  உள்பட பாலிவுட் நட்சத்திரங்கள் பலர், தலைமை மாடல்களாகக் கலந்துகொண்ட இந்த விழாவில், பல இந்திய ஆடை வடிவமைப்பாளர்கள் தங்களின் படைப்புகளை வெளியிட்டனர். இதையடுத்து பிப்ரவரி 8-ம் தேதி, ஹாலிவுட் நட்சத்திரங்களின் சிவப்புக் கம்பள விரிப்புடன் NYFW - New York Fashion Week தொடங்கியது. பாரிஸ், லண்டன், மிலன் போன்ற நகரங்களிலிருந்து பல ஆடை வடிவமைப்பாளர்கள் பங்கேற்றனர்.

ஃபேஷன்


NYFW -யின் நோக்கம்:
கவர்ச்சிக் கூடாரம் என்று ஃபேஷன் ஷோக்கள் பற்றி கருத்துப் பகிரும் பலருக்கு, இதுதான் நாம் அன்றாட வாழ்வில் உடுத்தும் உடைக்கு அடித்தளம் என்பது தெரியாது. இதுபோன்ற ஃபேஷன் ஷோ நடப்பதன் மூலம் என்ன பயன் என்பவர்களுக்கும் ஃபேஷன் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்று கேட்பவர்களுக்கும் பதில் இங்கே.

Fashion Week


பொதுவாக நாம் கடைகளில் வாங்கும் உடைகள் 'ரெடிமேட் ஆடை' வகையைச் சேர்ந்தது. அதாவது, பல்வேறு டிஸைன்களிலும், நிறங்களிலும், அதிகபட்சமாக சின்னச்சின்ன ஆல்டரேசன்களுடன் நாம் வாங்கும் ஷர்ட், ஜீன்ஸ், சல்வார் கமீஸ், புடவை போன்றவைகள் அனைத்தும் ரெடிமேட் ஆடைகளில் சேரும். இதுபோக, ஷர்ட் பிட், சல்வார் பிட், பேன்ட் பிட் போன்ற 'மெட்டீரியல்ஸ்' எனப்படும் தையலிடாத துணிவகைகளும் இதில் அடங்கும். இது பருவகாலத்துக்கு ஏற்ப வேறுபடும். குறைந்தது மூன்று மாதத்துக்குள் டிஸைன், நிறம், பேட்டர்ன் போன்றவை மாறும். இவையனைத்தையும் நிர்ணயிப்பது ஃபேஷன் ஷோக்கள்தான். சுட்டெரிக்கும் சூரியனை எதிர்கொள்ளும் துணிவகைகளைக்கொண்டு 'கோடை கால ஃபேஷன் ஷோ' மற்றும் உறையவைக்கும் குளிரை எதிர்கொள்ளும் துணிவகைகளைக்கொண்டு குளிர்கால ஃபேஷன் ஷோ என்று ஆண்டுக்கு இருமுறை ஆடை வடிவமைப்பாளர்கள் தங்களின் அந்தக் காலத்துக்கான படைப்புகளை காட்சிப்படுத்துவார்கள். இதில் தற்போது நியூயார்க்கில் நடைபெறுவது குளிர்கால ஃபேஷன் ஷோ. இவர்களின் ஃபேஷன் ஷோக்களில் ரெடிமேட் ஆடைகள் இருக்காது. மாறாக 'அவான்ட் கார்ட்' எனப்படும் சோதனைக்குட்படுத்தப்பட்ட ஐடியாக்கள் கொண்ட ஆடைகள் மட்டுமே வெளியிடுவார்கள். இதில் உலகெங்கிலும் உள்ள ஆடை வடிவமைப்பாளர்கள், துணி/நகை வியாபாரிகள், நிருபர்கள் கலந்துகொள்வர்.

Winter Fashion


ஆடை வடிவமைப்பாளர்கள், பல ஆய்வுகளுக்குப்பின் அந்த ஆண்டுக்கான நிறம், பேட்டர்ன் போன்றவற்றை தங்களின் ஆடைகளில் உட்படுத்தி, இதுபோன்ற ஃபேஷன் ஷோக்கள் மூலம் வெளியிடுவார்கள். அங்கே வந்திருக்கும் வியாபாரிகள் தங்களுக்குப் பிடித்த நிறம், பேட்டர்ன் போன்றவற்றைத் தேர்வு செய்துகொள்ளலாம். பஸ்ஸில் சீட் போடுவதைப்போன்று, அட்டகாசமான டிசைன்களுக்குப் பலரும் போட்டியிடுவார்கள். இப்படி, போட்டிகள் நிறைந்த களமாய் மாறியிருக்கும் ஃபேஷன் ஷோவை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையைச் செய்கிறது ஊடகங்கள். இது உள்ளாடைகள் முதல் இணையாடைகள் வரை அனைத்து ஃபேஷன் ஷோக்களுக்கும் பொருந்தும்.

Bag


அனைவரும் பரபரப்பாகப் பகிர்ந்துகொள்ளும் #MeToo பிரசாரத்தின் குறிப்போடு கோலாகலமாகத் தொடங்கிய இந்த ஆண்டின் NYFW, பிப்ரவரி 16-ம் தேதி வரை நடைபெறும். இது குளிர்கால ஃபேஷன் ஷோ என்பதால், பெரும்பாலான உடைகள் 'கோட்' வகையைச் சேர்ந்திருந்தது. 'வெல்வெட்' துணிவகை அதிகம் பயன்பட்டிருப்பதால், இந்த ஆண்டில் அதிக ஆடைகள் வெல்வெட்டில் காணலாம். மின்னும் சீக்வன்ஸ், சிவப்பு மற்றும் அடர்த்தி நிற ஆடைகள், பாப் அப் நிற ஆடைகள், ட்ரெண்டி ப்ரின்ட்ஸ் போன்றவைகளும் அதிகம் காணப்பட்டது.


டிரெண்டிங் @ விகடன்