`அழகாகச் சொன்னார்; எனக்கு பதில் சொல்லத் தெரியல' - மோடி பாணியில் பேசிய ட்ரம்ப்

`இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் `ஹார்லே டேவிட்ஸன்' வாகனங்களுக்கு 50 சதவிகிதம் இறக்குமதி வரி விதித்துள்ளது  தங்களுக்குப் பெரும் பின்னடைவானது’ என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

trump
 

நேற்று, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், வணிகக் கூட்டத்தொடரில் பேசிய அதிபர் ட்ரம்ப் , "இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான வாகனங்கள் அமெரிக்காவில் இறக்குமதி செய்ய வரி ஏதும் விதிக்கப்படுவதில்லை. ஆனால், தற்போது இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் 'ஹார்லே டேவிட்ஸன்' வாகனங்களுக்கு 50 சதவிகிதம் இறக்குமதி வரி வசூலிக்க இந்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதனால், அமெரிக்காவுக்கு எந்த ஒரு பயனும் இல்லை. மேலும், இது அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவாகும். நாங்கள், மற்ற நாடுகளுடன் சமூக வணிக ஒப்பந்தம் மேற்கொள்ள விரும்புகிறோம். அதையே மற்ற நாடுகளிடமிருந்தும் எதிர்பார்க்கிறோம்’' என்றார்.

மேடையில் பேசிக்கொண்டிருந்த ட்ரம்ப், திடீரென கைகளைக் கட்டிக்கொண்டு மோடி பாணியில் பேசத் தொடங்கினார்... 

‘நான் மிகவும் மதிக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என்னை தொலைபேசியில் அழைத்தார். ஹார்லே டேவிட்ஸன் வாகனங்களுக்கு 50 சதவிகித இறக்குமதி வரி வசூலிக்க இந்திய அரசு முடிவுசெய்துள்ளது' என்று மோடி அழகாகச் சொன்னார். மோடி மிகவும் அழகான மனிதர். அதற்கு என்ன பதில் சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை’ என்று மோடி போன்று கனிவான குரலில் பேசி முடித்தார் ட்ரம்ப்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!