ராணுவத்தில் சேர பெண்களுக்கு பச்சைக்கொடி காட்டிய சவுதி!

சவுதி அரேபியாவில், 'பெண்கள் ராணுவத்தில் சேரலாம்' என்கிற அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. 

பெண்கள்


அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில், மன்னராட்சி நடைபெற்றுவருகிறது. இங்கு, பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் நிலவி வந்தன. இப்போது, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சவுதி அரேபியா வெளியேவருகிறது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. சீர்திருத்த நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டுவருகின்றன. 

அந்தவகையில், 'பெண்கள் ராணுவத்தில் சேரலாம்' என்கிற அறிவிப்பை சவுதி அரேபிய அரசு வெளியிட்டுள்ளது. இது, கட்டாயம் இல்லை. விருப்பமுள்ள பெண்கள் மட்டும் ராணுவத்தில் சேரலாம். ரியாத், மெக்கா, மதீனா, அல்-காசிம், ஆஸிர், அல் பஹா ஆகிய நகரங்களில் ராணுவத்தில் சேரும் பெண்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  சவுதி ராணுவத்தில் சேர, உயர்நிலைப் பள்ளிப் படிப்பு அல்லது பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 25. அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டுமென்று விதிகள் உள்ளன. 

முன்பு, சவுதி அரேபியாவில் பெண்கள் காரோட்ட அனுமதியில்லை.  அந்தத் தடை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீக்கப்பட்டது. அதோடு, சமீபத்தில் கால்பந்து போட்டியைப் பார்க்க பெண்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!