இலங்கை இறுதிப்போர்- காணாமல் போனவர்கள் நிலை அறிய குழு!

இலங்கை இறுதிப்போரில், காணாமல்போனவர்களின் நிலை அறிய, இலங்கை அதிபர் சிறிசேனா குழு ஒன்றை அமைத்துள்ளார். அந்தக் குழுவில் 7 பேர் இடம்பெற்றுள்ளனர். 

இலங்கை


இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே நடைபெற்றுவந்த உள்நாட்டுப் போர், 2008-ம் ஆண்டு நிறைவுக்கு வந்தது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டார். இறுதிப்போரின்போது அப்பாவி மக்கள் 40 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கானவர்கள் மாயமாகினர். அவர்களின் கதி என்னவென்று தெரியாதநிலை உள்ளது. 

 இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் இன்னும் ராணுவத்தின் ஆதிக்கமே நீடிக்கிறது. தமிழர்களின் நிலங்கள், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றை திருப்பித் தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துவருகிறார்கள். மேலும், காணாமல் போனவர்களின் நிலை என்னவென்று அறிய வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாகும்.

இந்நிலையில், இறுதிப்போர் நடந்த சமயத்தில் காணாமல் போனவர்கள்பற்றிய நிலையை அறிய, 7 பேர் கொண்ட குழுவை அதிபர் சிறிசேனா அமைத்துள்ளார். இந்தக் குழு, அடுத்த 3 ஆண்டுகளுக்குத் தன் பணிகளைத் தொடரும். குழுவில் 2 தமிழர்கள் மற்றும் ஒரு இஸ்லாமியர் இடம்பெற்றுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!