அமெரிக்க அதிபர் மாளிகை முன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!

அமெரிக்க அதிபர் மாளிகை முன்பாக இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக வெள்ளைமாளிகை அறிவித்துள்ளது. 

Photo Credit: AP

வாஷிங்டன் டி.சியில் வெள்ளை மாளிகை என்றழைக்கப்படும் அமெரிக்க அதிபர் மாளிகை இருக்கிறது. அமெரிக்க அதிபராகப் பதவியேற்பவர்கள் இங்கு குடும்பத்துடன் வசிப்பது வழக்கம். இந்த மாளிகையின் எதிரே  உள்ள நடைபாதையில் அமெரிக்க நேரப்படி காலை 11.46 மணிக்கு இளைஞர் ஒருவர் பலமுறை துப்பாக்கியால் சுட்டார் என்று அந்நாட்டு புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.  உறவினர்களின்  பாதுகாப்புக்காக அந்த இளைஞர் குறித்த தகவல்களை அமெரிக்கா வெளியிடவில்லை. அவர் வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில், படுகாயமடைந்த அந்த இளைஞர்  உயிரிழந்து விட்டதாகவும், இதில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.  துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் வெள்ளை மாளிகையில் இல்லை. அதேநேரம், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு விளக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, புலனாய்வுப் பிரிவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!