ஓடும் விமானத்தில் பணிப்பெண்ணிடம் சில்மிஷம் - மாணவர் கைது

மலேசியாவிலிருந்து வங்கதேசம் சென்ற விமானம் ஒன்றில், பயணம் செய்த வங்கதேச மாணவர் ஒருவர், விமானப் பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டதால் கைது செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

விமானம்

மலின்டோ ஏர் எனும் விமானம் மலேசியாவிலிருந்து வங்கதேசம் சென்றது. இதில், மலேசியப் பல்கலைக்கழகத்தில் படித்து வரும், வங்கதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், விமானம் புறப்பட்ட சற்று நேரத்தில் தன்னுடைய லேப்டாப்பில் ஆபாசப் படங்களைப் பார்க்க தொடங்கினார். அப்போது, தன்னுடைய ஆடைகளைக் கழற்றிவிட்டு, அரை நிர்வாணமாக அமர்ந்துகொண்டு, மிகவும் அநாகரிகமான செயலில் ஈடுபட்டுள்ளார். 

இவரின் செயல்களைக் கண்ட விமானப் பணியாளர்கள், இப்படிப்பட்ட அநாகரிகச் செயல்களைச் செய்ய வேண்டாம். தயவு செய்து ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கையை அந்த மாணவர் விமானப் பணிப்பெண் ஒருவரிடம் தவறுதலாக நடக்க முயற்சி செய்துள்ளார். அதற்கு அப்பெண் மறுத்துவிட்டதால், ஆத்திரமடைந்த மாணவன் அப்பணிப்பெண்ணை மிகவும் கொடூரமாகத் தாக்கியுள்ளார். 

இதனைக் கண்ட சகவிமானப் பயணிகள் உடனடியாக அந்த வாலிபரைப் பிடித்து, அவருடைய கையை கட்டியுள்ளனர். இதனையடுத்து விமானம் வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவில் தரையிறங்கியதும் வாலிபரை அதிகாரிகள் கைது செய்தனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!