உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னேறிய முகேஷ் அம்பானி..!

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 33-வது இடத்திலிருந்து 19-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி. 

ஒவ்வோரு வருடமும் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை அந்த ஆண்டிற்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவிலிருந்து மட்டும் 101 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்தப்
பட்டியலில் 19 பேர் புதிதாகவும் இணைந்துள்ளனர். உலக அளவில் 112 பில்லியனுடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்
முதலிடம் பிடித்துள்ளார். உலகில் 100 பில்லியனை தாண்டிய முதல் மனிதர் இவர் என ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டிலிருந்து இதுவரை அமேசான் நிறுவனத்திற்கு 39.2 பில்லியன் வருமானம் அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸ் இந்த ஆண்டு இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார். முன்றாம் இடத்தை வாரென் புஃபெட் பெற்றுள்ளார். உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் 5-வது இடத்தைப் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி, கடந்த ஆண்டு இருந்த 33-வது இடத்திலிருந்து 19-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு இருந்த 544-வது இடத்திலிருந்து 766-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்தியாவைப் பொறுத்துவரை முகேஷ் அம்பானி 40.1 பில்லியன் கோடியுடன் முதலிடத்தில் உள்ளார், இரண்டாவது இடத்தை அசிம்
பிரேம்ஜியும் மூன்றாவது இடத்தை லக்ஷ்மி மிட்டல் நிறுவனமும் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் 585 பணக்காரர்களுடன் அமெரிக்கா
முதலிடத்தையும், 373 பணக்காரர்களுடன் சீனா இரண்டாவது இடத்தையும், 101 பணக்காரர்களை பெற்று இந்தியா மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!