``சுகாதார மேம்பாட்டுக்கு செலவிடுங்கள்..!” ஊதிய உயர்வை மறுத்த கனடா மருத்துவர்கள்! | Canada doctors reject pay rise

வெளியிடப்பட்ட நேரம்: 09:48 (09/03/2018)

கடைசி தொடர்பு:10:02 (09/03/2018)

``சுகாதார மேம்பாட்டுக்கு செலவிடுங்கள்..!” ஊதிய உயர்வை மறுத்த கனடா மருத்துவர்கள்!

'தேவைகளுக்கு ஏற்ப அதிகப்படியான வருமானம் பெறுவதால், ஊதிய உயர்வு தேவையில்லை' என்று கனடா நாட்டைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள், அந்நாட்டு மருத்துவ கவுன்சிலிடம் மனு அளித்துள்ளனர். 

மருத்துவர்

கனடாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கியூபெக் நகரத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர்களுக்கு, சமீபத்தில் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் சுமார் 750-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், அவர்களது மருத்துவச் சங்கத்தில் மனு அளித்துள்ளனர். அதனால், மருத்துவச் சங்கத்தின் தரப்பிலிருந்து மனுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு, மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் எனப் பலரும் கடுமையாக உழைத்துவருகின்றனர். மேலும், செவிலியர்களின் பற்றாக்குறை மிக அதிகமாக உள்ளது.

அதனால் அவர்கள் பணிச்சுமை காரணமாக, மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். எங்களது சக ஊழியர்கள் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் சிக்கித் தவிக்கும்போது, நாங்கள் எவ்வாறு இந்த ஊதிய உயர்வை ஏற்றுக்கொள்ள முடியும். அதனால் எங்களுக்கு இந்த ஊதிய உயர்வு தேவையில்லை என நிராகரித்துள்ளனர். 

மேலும், தேவைக்கு அதிகமான வருமானத்தைப் பெறுவதால், இந்த ஊதிய உயர்வுப் பணத்தை நாட்டின் சுகாதார மேம்பாட்டுக்குப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என அரசு மருத்துவர்கள், அவர்களின் சங்கத்திடம் மனு அளித்துள்ளனர்.
 


[X] Close

[X] Close