வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (09/03/2018)

கடைசி தொடர்பு:19:40 (09/03/2018)

சிறுமியைக் கடிக்கப் பாய்ந்த சிங்கக் குட்டி..! வைரலாகும் வீடியோ

சவுதி அரபியா நாட்டிலுள்ள ஜெட்டா நகரத்தில் சிங்கத்துடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை சிங்கம் கடித்துக் குதற முயற்சி செய்தது. அந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. 

சவுதி அரேபியா நாட்டின் ஜெட்டா நகரத்தில் வசந்தகால விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அந்த விழாவில் சிங்கக் குட்டியுடன்,  குழந்தைகள் ஓடி விளையாடும் விளையாட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், ஏராளமான குழந்தைகள் சிங்கக் குட்டியுடன் ஓடி விளையாண்டுக் கொண்டிருந்தன. திடீரென அந்தச் சிங்கம் ஒரு சிறுமியை மட்டும் கடிக்கத் தொடங்கியது. அந்தச் சிறுமி, தப்பிப்பதற்கா சிங்கத்தை எட்டி உதைத்தார். இருப்பினும் சிங்கம் விடாமல் கடித்தது. அதில், நிலைதடுமாறி அந்தச் சிறுமி கீழே விழுந்தார். யாரும் அந்தச் சிறுமியைக் காப்பாற்ற முயற்சிசெய்யவில்லை. பின்னர், சிங்கத்தின் பயிற்சியாளர் சென்று சிறுமியை மீட்டார். அதில், சிறுமி காயமடைந்தார். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் செல்போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.