ரோகிங்யா விவகாரம்! ஐ.நா புகாரை மறுக்கும் ஃபேஸ்புக்

மியான்மரில் நடைபெற்ற இனப்படுகொலையில் ஃபேஸ்புக் சமூகவலைதளத்துக்கு முக்கிப்பங்கு உள்ளதாக ஐ.நா மனித உரிமை நிபுணர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.  அதே நேரத்தில் ஐநாவின் குற்றச்சாட்டை ஃபேஸ்புக் மறுத்துள்ளது.

பேஸ்புக்

மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில், பௌத்தர்களுக்கும் ரோகிங்யா மக்களுக்கும் இடையே, மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, மியான்மர் ராணுவத்தினர், ரோகிங்யா மக்களை எதிர்த்துப் பயங்கர தாக்குதல் நடத்தினர். அதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றனர். 

ரோகிங்யா மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரித்துவரும் ஐ.நாவின் சர்வதேச சுயாதீன குழுவின் தலைவர் மர்சூக்கி தருஸ்மன் செய்தியாளர்களிடம் கூறும்போது, மியான்மரில் நடைபெற்ற மத வன்முறைக்கு சமூக ஊடகம் முக்கியப் பாத்திரம் வகித்துள்ளது என்றார். அதில், ஃபேஸ்புக் எனும் முகநூல்தான் மிருகத்தனமாக மாறி, மத வன்முறையைத் தூண்டும் விதமாகவே செயல்பட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார். 

ஐ.நா

இதற்குப் பதிலளித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், ''வெறுப்புஉணர்வைத் தூண்டும் விசயங்களைப் படமாக ஒருவர் தொடர்ச்சியாகப் பகிர்ந்துகொண்டால், அவர்களது, ஃபேஸ்புக் கணக்கை முடக்குவது தொடர்ந்து, பதிவுகளை நீக்கம் செய்வது என அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு  வருகிறது'' என கூறியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!