வெளியிடப்பட்ட நேரம்: 13:14 (14/03/2018)

கடைசி தொடர்பு:19:11 (15/03/2018)

18 ஆண்டுகளுக்குப் பிறகு காதல் தம்பதியை ஆச்சர்யப்படுத்திய அபூர்வ புகைப்படம்! #Viral

 

சீன தம்பதி

அந்த அபூர்வ புகைப்படம்..

சீனப் பெண் ஒருவர்  தன் கணவரை சந்திப்பதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்துக்கொண்ட புகைப்படத்தில், தற்செயலாகத் தன் கணவரும் இடம்பெற்றிருப்பதைக் கண்டு ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளார். குழப்புகிறதா...  இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்..


சீனாவைச் சேர்ந்த யீ (Ye) - சூய் (Xue) தம்பதி கடந்த 2011-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். தற்போது அவர்களுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அவர்கள் முதன்முதலில் சந்தித்துக்கொண்டது 2011-ம் ஆண்டு செங்டூ என்னும் இடத்தில் என்றுதான் இத்தனை நாள் நினைத்திருந்தனர். ஆனால், அவர்கள் காதல் வாழ்க்கையில் ஒரு சின்ன ட்விஸ்ட்.

கடந்த மார்ச் 4-ம் தேதி யீ தன் மனைவியின்  புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். கடலோர நகரமான கிங்டாவோவில் மே ஃபோர்த் ஸ்கொயர் ( May Fourth Square) என்னும் இடத்தில் எடுத்த புகைப்படம் அது. அந்தப் புகைப்படத்தில் தன் மனைவியின் பின்னால் அவரும் இடம்பெற்றிருந்தார். அந்தப் புகைப்படத்தை தன் மனைவியிடன் காண்பித்தபோதுதான் உண்மை விளங்கியது.  

சீன தம்பதி
 

18 ஆண்டுகள் முன்னர் அதாவது 2000-ம் ஆண்டு யீ, மே ஃபோர்த் ஸ்கொயர்  என்ற இடத்துக்குச் சுற்றுலா சென்றுள்ளார். அதே நாளில் சூய்யும் அதே இடத்துக்குச் சுற்றுலா சென்றுள்ளார். இருவரும் தற்செயலாக ஒரே இடத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சூய் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் தொலைவில் 'யீ'யின் உருவமும் பதிவாகியுள்ளது. சூய் இங்கு போஸ் கொடுக்கும் அதே சமயம், பின்னால் நின்றுகொண்டிருக்கும் 'யீ'யும் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கிறார். ’இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்கு முன்னரே ஒரே புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். காதலில் விழுவதற்கு முன்னரே ஏதோ ஒரு தருணத்தில் என் மனைவியை நான் கடந்து சென்றிருக்கிறேன் என்று நினைக்கும்போது என் உடல் புல்லரிக்கிறது’ என்று யீ சீன ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார். 

’குஷி’ பட பாணியில் சீனாவில் ஒரு நிஜ சம்பவம் நிகழ்ந்துள்ளது! 

Credits - Channel news asia

நீங்க எப்படி பீல் பண்றீங்க