கேட்கும் திறன் போகும் அபாயம்! - தொடர்ச்சியாக புகைபிடிப்பவர்களுக்கு அலெர்ட்

புகைப்பழக்கம் உடையவர்களுக்கு, கேட்கும் திறன் வெகுவாகப் பாதிக்கும் அபாயம்  இருப்பதாக ஜப்பான் ஆய்வறிக்கை  தெரிவித்துள்ளது. 

புகைப்பழக்கம்

தொடர்ச்சியாக புகைபிடிப்பவர்களுக்கு, புகைப்பழக்கம் இல்லாதவர்களைவிட 6 மடங்கு  மாரடைப்பு வர வாய்ப்பு உள்ளதாக, பல்வேறு ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஜப்பான் நடத்திய ஆய்வில், தொடர்ந்து புகைபிடிப்பவர்களுக்கு, மாரடைப்பு மற்றும் நுரையீரல் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அதற்கு மாறாக, அவர்களின் கேட்கும் திறனும் வெகுவாகப் பாதிக்கப்படும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

சுமார் 50 ஆயிரம் பேரிடம் இந்த மருத்துவ ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதில், புகைபிடிப்பவர்களின் கேட்கும் திறன் ஒலி மாசுவினால் பாதிப்படைவதைவிட , 20-ல் இருந்து 60 சதவிகிதம் புகைபிடிப்பதால் மட்டுமே கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வறிக்கை, நிகோடின் மற்றும் புகையிலை ஆராய்ச்சி எனும் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

ஜப்பான் உலக சுகாதார மற்றும் மருத்துவம் தேசிய மையத்தின் விஞ்ஞானி குயான்குயான் கூறுகையில், பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வின் மூலமே, இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது என்றும் தொடர்ந்து புகைபிடித்துவருபவர்களுக்கு, இந்த ஆய்வு எச்சரிக்கையாக அமையும் என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!