'ட்ரம்ப் சொத்துகள் தேவையில்லை!’ - 40 வயதில் ட்ரம்ப் மகனை விவாகரத்து செய்தார் வனேஸா | Trump Junior and his wife file for divorce

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (16/03/2018)

கடைசி தொடர்பு:12:50 (16/03/2018)

'ட்ரம்ப் சொத்துகள் தேவையில்லை!’ - 40 வயதில் ட்ரம்ப் மகனை விவாகரத்து செய்தார் வனேஸா

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மகனான, ட்ரம்ப் ஜூனியரை அவரது மனைவி வனேஸா விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும், அவரது முன்னாள் மனைவி இவானா ட்ரம்ப்புக்கும் பிறந்தவர், டொனால்டு ட்ரம்ப் ஜூனியர் (40). இவர், அமெரிக்க ஊடகங்கள் மற்றும் தொழில்துறையில் மிகவும் பிரபலமானவர். இவருக்கும், முன்னாள் மாடல் அழகியான 40 வயதான வனேஸாவுக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்குத் திருமணம் நடந்து 12 வருடங்கள் ஆன நிலையில், தற்போது இருவரும் பிரிய உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வனேஸா வெளியிட்டுள்ள அறிக்கையில், 12 வருடங்களாக நடந்துவந்த எங்களின் மண வாழ்க்கை, தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் பிரிய முடிவெடுத்து, நாங்கள் அவரவர் பாதையில் பயணிக்க உள்ளோம். இதனால், நாங்கள் எங்கள் குடும்பத்தின் மீதும், ஒருவருக்கொருவர் மீதும் வைத்துள்ள மரியாதை குறையாது. மேலும், நான் ட்ரம்ப் குடும்பத்தின் சொத்துகள் மீதோ, குழந்தைகள் மீதோ உரிமை கோரப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இதனால், குழந்தைகள் அனைவரும் ட்ரப்ம் குடுபத்திலேயே இருப்பார்கள் எனத் தெரிகிறது. இவர்களின் விவாகரத்து தொடர்பாக வெள்ளை மாளிகையோ அல்லது ட்ரம்ப் தரப்பில் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.