வெளியிடப்பட்ட நேரம்: 14:32 (17/03/2018)

கடைசி தொடர்பு:14:32 (17/03/2018)

கரும்பலகையில் மைக்ரோசாஃப்ட் பாடம் எடுத்த ஆப்பிரிக்க ஆசிரியர்!’ - கணினிகளைக் கொடுத்து சர்ப்பரைஸ் செய்த இந்திய நிறுவனம் 

Owura Kwadwo Hottish

பள்ளி மாணவர்களுக்கு,  கணினி இல்லாமல் கரும்பலகையில் மைக்ரோசாஃப்ட் வரைப்படம் வரைந்து பாடம் நடத்தி, உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்திய ஆப்பிரிக்க ஆசிரியருக்கு, இந்திய நிறுவனம் கணினிகளைப் பரிசளித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் குமாசி நகரத்தைச் சேர்ந்தவர், ஒவாரா கவாட்வோ. பள்ளி ஆசிரியரான கவாட்வோ, தான் பணிபுரியும் பள்ளியில் கணினி வசதி இல்லாத காரணத்தால், கரும்பலகையில் மைக்ரோசாஃப்ட் வேர்டு பக்கத்தை (Microsoft word page)  வரைந்து பாடம் நடத்தி, உலக அரங்கின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினார். ’கணினி இல்லாமலேயே, உள்ளூரில் கிடைக்கும் உபகரணங்களை (கரும்பலகை, சாக்பீஸ்) வைத்து Microsoft படிக்கிறோம்’ என்ற கேப்ஷனுடன் அவர் பகிர்ந்த புகைப்படம்,  சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதையடுத்து, காவட்டோவின் இந்த முயற்சிக்குப் பாராட்டு தெரிவித்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம், விரைவில் அவரது பள்ளிக்கு வேண்டிய உபகரணங்களைச் செய்துதருவதாக உறுதியளித்தது.

Owura Kwadwo Hottish


கணினி இல்லை என்றாலும், எப்படியாவது மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற அவரின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக,  இந்திய நிறுவனத்தின் துணை நிறுவனமான, ’என்ஐஐடி கானா’ உதவ முன்வந்துள்ளது.  என்ஐஐடி கானா சார்பாக, அந்தப் பள்ளிக்கு ஐந்து கணினியும், புத்தகங்களும் பரிசளித்துள்ளனர். 

Owura Kwadwo Hottish


இதுகுறித்து என்ஐஐடி  நிறுவனத்தின் மேலாளர் ஆஷிஷ் குமார் பேசுகையில், ‘ஒவாரா கவாட்வோவின் புகைப்படங்கள் வைரலானதைக் கவனித்தோம். அவரின் அர்ப்பணிப்பு எங்களை ஆச்சர்யப்படவைத்தது. எங்களால் முடிந்த உதவியைச் செய்துகொடுத்தோம். எங்களின் பிரதிநிதி, அந்தப் பள்ளிக்குச் சென்று கணினிகளைக் கொடுத்தபோது, மாணவர்களைவிட கவாட்வோவின் முகத்தில் அத்தனை சந்தோஷம்’ என்றார். 

Owura Kwadwo Hottish

இதுகுறித்து கவாட்டோ கூறும்போது, ''நான் எனது மாணவர்களை நேசிக்கிறேன். அவர்களுக்கு, எந்த வகையிலாவது நான் நடந்தும் பாடங்கள் புரிய வேண்டும் என்று விரும்புகிறேன். நான் இதை எனது ஃபேஸ்புக் பக்கத்தில் மற்ற புகைப்படங்களைப் போலத்தான் பகிர்ந்தேன். ஆனால், இந்த அளவுக்கு மக்களிடையே ஆதரவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை'' என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க