மனிதநேயமிக்க செயல்களால் முகம் மாறும் சவுதி! | Saudi people have great humanitarian feelings

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (22/03/2018)

கடைசி தொடர்பு:13:50 (22/03/2018)

மனிதநேயமிக்க செயல்களால் முகம் மாறும் சவுதி!

வுதி அரேபியாவைச் சேர்ந்த ஷேக் ஒருவரின் வீட்டில், இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் 36 வருடங்களாகப் பணிபுரிந்துவந்தார். ஷேக்கின் குழந்தைகளைத் தன் குழந்தைகள் போலவே அவர் வளர்த்தார். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி, வர்த்தகர்களாக மாறினர். இப்போதும் அந்த பெண், அதே வீட்டில்தான் பணிபுரிகிறார். ஆனால், பணிப்பெண்ணாக இல்லை... வளர்ப்புத் தாயாக மாறியிருந்தார். நான்கு நாள்களுக்கு முன், இலங்கையிலிருந்து வந்த தகவலில், பணிப் பெண்ணின் கணவர் இறந்துவிட்டார் என்று சொல்லப்பட்டது. ஷேக் குடும்பத்தினர் மிகுந்த வேதனை அடைந்தனர். கணவர் இறந்த தகவலை பணிப்பெண்ணிடம் கூறத் தயங்கினர். 

இலங்கை பணிப்பெண்ணை பரிவுடன் நடத்தும் ஷேக்

எனவே, அவரின் கணவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி உடனடியாக விமான டிக்கெட் எடுத்து இலங்கைக்கு அனுப்பி வைத்தனர். அந்தப் பெண், மகன் போல வளர்த்தவர்களில் ஒருவரே விமான நிலையத்துக்கு வந்து ' எல்லாம் கடவுள் பார்த்துக்கொள்வார் தைரியமாகப் போய்வாருங்கள் ' என்று கூறி, பணிப்பெண்ணின் நெற்றியில் முத்தமிட்டு வழியனுப்பிவைத்தார். பின்னர், அந்தப் பணிப்பெண்ணுக்கும் தனக்கும் தன் சகோதரர்களுக்குமுள்ள உறவுகுறித்து சமூக வலைதளத்தில், ''நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது, எங்கள் தந்தைக்குத் தெரியாமல் தனது சம்பளப் பணத்திலிருந்து எங்களுக்கு பணம் கொடுப்பார். அவரின் செல்லப்பிள்ளைகளாகவே நாங்கள் வளர்ந்தோம். மீண்டும் இங்கே வர ஆசைப்பட்டால், நாங்கள் கடைசி வரை அவரை பார்த்துக்கொள்வோம்'' என்று கூறியிருந்தார். ஆயிரக்கணக்கானோர் அந்தப் பதிவை லைக் செய்திருந்தனர். 

saudi arabia

இதேபோல, நேற்றும் இன்னொரு நெகிழவைக்கும் சம்பவம் சவுதியில் நடந்துள்ளது. சவுதி ஷேக் வீட்டில் வேலைபார்த்த டிரைவர் ஒருவர், தாய்நாட்டுக்குச் சென்று விட்டு மீண்டும் சவுதிக்கு திரும்பியுள்ளார். டிரைவரை ஷேக் கேக் வெட்டி வரவேற்றார்.  'வெல்கம் பேக்' என்று எழுதப்பட்டிருந்த கேக்கை, அந்த டிரைவரை வைத்தே வெட்டச் செய்தார் ஷேக். அந்தப் புகைப்படத்தை ஷேக் ட்விட் செய்துள்ளார். இந்தப் புகைப்படத்தையும் ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். 

சவுதியில் வீட்டு வேலைக்குச் செல்பவர்கள், பல்வேறு இன்னல்களைச் சந்திப்பதாகக் கேள்விப்பட்டுள்ளோம். சமீப காலமாக, சவுதியிலி  ருந்து வரும் செய்திகள், சவுதி அரேபியாவின் முகத்தை மாற்றும் விதத்தில் உள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க