இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை!

ரஷ்யாவிலிருந்து அமெரிக்கா செல்ல முயன்ற இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவுக்குத் தடை விதிக்கப்பட்டது. 


ரஷ்யாவில் நடந்துமுடிந்த அதிபர் தேர்தலைப் பார்வையிடுவதற்காக நமல் ராஜபக்சே சென்றிருந்தார். ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் தேர்தல் தொடர்பான 2 ஆலோசனைக் கூட்டங்களிலும் இலங்கை எதிர்க்கட்சி எம்.பியாக இருக்கும் நமல் கலந்துகொண்டார். மாஸ்கோவிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரை விமானத்தில் ஏற்ற எமிரேட்ஸ் நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது. அமெரிக்கத் தூதரகத்தின் அறிவுறுத்தலின்படியே இந்த நடவடிக்கை எடுத்ததாக எமிரேட்ஸ் நிறுவனம் விளக்கமளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

உரிய விசா ஆவணங்கள் இருந்தாலும், தன்னை விமானத்தில் ஏற்ற அனுமதிக்கவில்லை என அமெரிக்கத் தூதரகம் மீது நமல் ராஜபக்சே குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மாஸ்கோ மற்றும் கொழும்பு நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் உரிய விளக்கமளிக்கவில்லை என்றும் நமல் ராஜபக்சே புகார் தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் என்பதாலா அல்லது ரஷ்யாவிலிருந்து பயணம் மேற்கொண்டதாலோ அமெரிக்காவுக்குள் நுழைய எனக்கு அனுமதிகிட்டவில்லை எனவும் நமல் ராஜபக்சே ட்விட்டர் பதிவில் கருத்துத் தெரிவித்துள்ளார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!