வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (22/03/2018)

கடைசி தொடர்பு:16:45 (22/03/2018)

பிள்ளையை மடியில் வைத்து தேர்வு எழுதிய ஆஃப்கான் பெண்! - உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த புகைப்படம்

ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் இரண்டு மாத குழந்தையைக் கவனித்துக்கொண்டே தேர்வு எழுதும் புகைப்படம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

ஆஃப்கானிஸ்தானில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நுழைவுத் தேர்வு நடைபெற்றுள்ளது. அந்தத் தேர்வுக்கு 25 வயதுள்ள ஜஹான் டாப் (Jahan Taab) என்ற பெண் ஒருவர் தேர்வு எழுத வந்துள்ளார். அவர், தேர்வு எழுதிக் கொண்டிருக்கும்போது அவரின் இரண்டு மாதக் குழந்தை அழுதுள்ளது.

உடனே, அவர் அந்தக் குழந்தையை மடியில் எடுத்து வைத்துக்கொண்டு, தரையில் அமர்ந்து தேர்வு எழுதியுள்ளார். அப்போது, தேர்வு கண்காணிப்பாளராக இருந்த யாஹ்யா எர்ஃபான் (Yahya Erfan) அதைப் போட்டோ எடுத்து அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது உலகம் முழுவதும் வைரலாகிவருகிறது. மேலும், குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு தேர்வு எழுதிய பெண்ணுக்குப் பாராட்டுகளும் குவிந்துவருகின்றன.