சவுதி வழியாக இஸ்ரேல் சென்ற முதல் விமான சேவை! - வரலாறு படைத்தது ஏர் இந்தியா | Air India makes history by flying to Israel via Saudi airspace

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (23/03/2018)

கடைசி தொடர்பு:16:45 (23/03/2018)

சவுதி வழியாக இஸ்ரேல் சென்ற முதல் விமான சேவை! - வரலாறு படைத்தது ஏர் இந்தியா

ஏர் இந்தியா விமானம் முதன் முதலாக சவூதி அரேபியா வழியாக இஸ்ரேலில் தரையிரங்கி புதிய வரலாறு படைத்துள்ளது.

ஏர் இந்தியா

டெல்லியிலிருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகருக்கு நேற்று முதல் நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. நேற்று முதன்முதலாக ஏர் இந்தியா விமானம் டெல்லியிலிருந்து புறபட்டு இஸ்ரேலுக்குச் சென்றது. இது வான் வழியில் செல்லும் போது சுமார் 8 மணிநேரத்தில் இஸ்ரேலைச் சென்றடையும். ஆனால், சவுதி அரேபியா வழியாகச் சென்றால் 5 மணி நேரத்தில் சென்றடைய முடியும் இதனால் 3 மணி நேரம் மிச்சமடையும்.

இஸ்ரேல் நகருக்குச் செல்லும் அல்லது அங்கு சென்று திரும்பும் எந்த விமானமும் சவுதி அரேபிய வான் எல்லையில் நுழையக் கூடாது என அந்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், தற்போது டெல்லியிலிருந்து இஸ்ரேல் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் அரேபிய வான் எல்லையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்திருந்தார். நேற்று இந்த சேவை தொடங்கிவைத்த நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரேல் சுற்றுலாத் துறை அமைச்சர் யாரிவ் லெனின், வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் தொடங்கியுள்ளதாகவும் இதனால் இந்தியா இஸ்ரேலுக்கு இடையே உள்ள உறவு மேம்படும் எனத் தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா விமானம் இஸ்ரேல் செல்ல, சவுதி அரேபியாவின் வான் வழிப் பாதையில் அனுமதித்தது இதுவே முதல்முறையாகும். இதனால், இஸ்ரேலிலிருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.