ரஷ்யா: 37 பேரைப் பலிவாங்கிய கோர தீவிபத்து!

ரஷ்யாவில் கெமேரோவா பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 37 பேர் பலியாயினர்.

ரஷ்யாவில் தீ விபத்து

ரஷ்யாவின் கெமேரோவா நகரில் நேற்று (ஞாயிறு) வணிக வளாகம் ஒன்றின் 4 வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. திரையரங்கம், விளையாட்டுப் பகுதிகள், கடைகள் என 23,000 சதுர அடியில் உள்ளது அந்த வணிக வளாகம். இதில் சுமார் 16,000 சதுர அடி தீயில் கருகியது. 

2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வணிக வளாகத்தில், தீ விபத்தில் இதுவரை சுமார் 37 பேர் பலியாயினர். இந்த விபத்து தொடர்பாகக் கெமேரோவா ஆளுநர் பேசுகையில், ஒரு திரையரங்கில் மட்டும் 13 சடலங்கள் இருந்ததாகத் தெரிவித்தார். மேலும், தீவிபத்து ஏற்பட்டதைப் பார்த்ததும் பலர் ஜன்னல் வழியாகக் குதித்தும் தப்ப முயன்றனர். இதில் பலருக்குக் காயம் ஏற்பட்டது. 

இந்த வணிக வளாகத்தில் செல்லப் பிராணிகள் பூங்கா ஒன்றும் இருந்துள்ளது. இதில் இருந்த 200-க்கும் அதிகமான விலங்குகளும் இந்தத் தீ விபத்தில் பலியாகியுள்ளன. விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை எனவும் இதை விசாரிக்க, விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!