60 ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்றியது அமெரிக்கா! | US excommunicates 60 Russian officiers

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/03/2018)

கடைசி தொடர்பு:10:05 (27/03/2018)

60 ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்றியது அமெரிக்கா!

அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்

மெரிக்காவில் உள்ள ரஷ்யாவின் தூதரக அதிகாரிகள் 60 பேரை உளவுத்துறை அதிகாரிகள் எனக் கூறிய அமெரிக்கா, சியாட்டில் உள்ள ரஷ்ய தூதரகத்தை மூடவும் உத்தரவிட்டது. 

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்,  ”அமெரிக்காவில் உள்ள ரஷ்ய அதிகாரிகள் தங்கள் நாட்டின் தூதுவர்கள் என்ற போர்வையில் அமெரிக்க அரசை உளவு பார்க்கிறார்கள்'' என்று குற்றம்சாட்டியுள்ளார். இத்துடன் ரஷ்ய தூதரகத்தில் பணிபுரியும் 48 அதிகாரிகள் மற்றும் அமெரிக்காவுக்கான சிறப்புத் தூதரக அதிகாரிகளாக அனுப்பப்பட்ட 12 பேரையும் நாட்டிலிருந்து வெளியேற்றவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் துறைச் செயலாளர் சாரக் சாண்டர்,  “அமெரிக்காவில் இருந்து ரஷ்யாவின் உளவுத்துறை அதிகாரிகளை வெளியேற்றும்படி அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். மேலும், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் போயிங் தளம் அருகே உள்ள சியாட் தூதரகத்தை மூடவும் உத்தரவிட்டுள்ளார்” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்ய தூதரக அதிகாரிகள் அனைவரும் அந்த நாட்டு உளவுத்துறையுடன் தொடர்பில் உள்ளார்கள். அவர்கள் குடும்பத்துடன் வெளியேற ஏழு நாள்கள் அவகாசம் வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரஷ்யாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாகப் பணியாற்றிய செர்ஜய் ஸ்கிர்பால், கடந்த 4-ம் தேதி, இங்கிலாந்தில் உள்ள சாலிஸ்பரி நகரில், ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். அவர்களது உடலில் விஷம் ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இது, ரஷ்யாவின் செயல்தான் என ஸ்திரமாகக் கூறிய இங்கிலாந்து, ரஷ்யாவின் 23 தூதரக அதிகாரிகளை உளவுத்துறையினர் என வெளியேற்றியது. பதிலுக்கு, ரஷ்யாவும் இங்கிலாந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது. ஆனால், விஷத்தாக்குதலை ரஷ்யா மறுத்தது. ஆனால் இதன் எதிரொலியாக, பிரஸ்ஸல்ஸில் கடந்த வாரம் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் தலைவர்களின் மாநாட்டில் ஸ்க்ரிபால் தாக்கப்பட்டதற்கு ரஷ்யாதான் காரணம் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க