மண்.. மழை.. புயல்.. பனி..! - கிழக்கு ஐரோப்பாவை மூடிய ஆரஞ்சு நிறப் போர்வை

கிழக்கு ஐரோப்பா பகுதிகளில் ஆரஞ்சு நிற பனி படர்ந்து அப்பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆரஞ்சு நிற பனி

கிழக்கு ஐரோப்பா, ரஷ்யா, பல்கேரியா, உக்ரைன், ரொமானியா மற்றும் மால்டோவா ஆகிய பகுதிகைல் ஆரஞ்சு நிற பனி படர்ந்துள்ளது. இதைப் படம் பிடித்த அந்நாட்டவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் இந்தக் காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. 

ஆரஞ்சு போர்வை

சஹாரா பாலைவனத்தில் வீசும் மண் புயலின் காரணமாக  அது மழையுடன் கலந்து பனிப் பொழிவு நிகழும்போது ஆரஞ்சு நிறமாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் என்றும் ஆனால், இந்த முறை காற்றில் அதிக மண் கலந்துள்ளதால் பனிப்பொழிவு ஆரஞ்சு நிறமாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த நிகழ்வை நாசா தனது செயற்கைக்கோள் மூலம் படம் பிடித்தது. அந்தப் படத்தில் மத்திய தரைகடல் பகுதியில் அதிகமான மண்ணும் தூசிகளும் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மழையோ அல்லது பனிப்பொழிவோ நிகழும்போது தரையில் உள்ள துகள்கள் ஈரப்பதத்தால் மேலே வந்து பனியின் மேற்பகுதியில் படர்ந்து ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!