வெளியிடப்பட்ட நேரம்: 20:19 (02/04/2018)

கடைசி தொடர்பு:21:18 (02/04/2018)

45 மில்லியன் டாலர் செலவில் பிரிட்டன் இளவரசர் ஹாரியின் திருமணம் .. என்ன விசேஷம் ? #RoyalWedding

இளவரசர் ஹாரியின் வருங்கால மனைவி மேகன் மார்கலே அணியவிருக்கும் திருமண உடையின் விலை 4,20,000 முதல்  5,60,000 டாலர்கள் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

45 மில்லியன் டாலர் செலவில் பிரிட்டன் இளவரசர் ஹாரியின் திருமணம் .. என்ன விசேஷம் ? #RoyalWedding


பிரிட்டன்

PC: https://twitter.com/KensingtonRoyal

பிரிட்டன் முழுவதும் கோலாகலமாக இருக்கிறது . அந்த நாட்டின் அரச குடும்பத்தின் திருமணம் வரும் மே 19-ம் தேதி நடக்கவிருப்பதையொட்டி, அந்தத்  திருமணம் எங்கே நடக்கும் ? எப்படிப்பட்ட பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்படும்? இளவரசர் ஹாரியும், அவரின் வருங்கால மனைவி மேகன் மார்க்லினும் (Meghan Markle)  என்ன உடை அணிவார்கள்? எனப் பல கேள்விகளுடன் அந்நாட்டு மக்களும், மீடியாவும் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த நவம்பர் மாதம், ராணி எலிசபெத் தலைமையில், இருவருக்கும் நிச்சயமானது. இந்த ராயல் திருமணம் குறித்து , அரசக் குடும்பத்தின் அதிகாரபூர்வமான  ட்விட்டர்  பக்கமான ‘கின்சிங்க்டன் பேலஸ்’ (Kensington Palace), தொடர்ந்து ட்வீட் செய்து வருகின்றனர்.

வரும் மே 19-ம் தேதி, காலை 7 மணிக்கு தொடங்கிவிருக்கிறது இளவரசர் ஹாரி என்ற வெல்ஸின் இளவரசர்  ஹென்ரி சார்ல்ஸ் அல்பர்ட் டெவிட் மற்றும்  மேகன் மார்க்லேவின் திருமணம். பொதுவாக, அரச குடும்பத்தின் திருமணங்கள் வாரநாள்களில்தான் நடக்கும். ஆனால், இவர்களின் திருமணம் சனிக்கிழமை நடக்கவிருக்கிறது. அரச குடும்பத்துக்குச் சொந்தமான விண்ட்சார் காஸ்ட்டிலில் உள்ள 'சென்ட் ஜார்ஜ்’ சாப்பல் ஹாலில் நடக்கவிருக்கிறது . 

பிரிட்டன்

லண்டனின் பிரபல கேக் தயாரிக்கும் நிறுவனமான  வொய்லட் கேக்ஸ், இவர்களின் திருமண கேக்கை வடிவமைக்கவுள்ளனர். கேக் தயாரிக்கும் செஃப் க்ளாரே ப்டக் (Clarie Ptak)  இதற்கான பொறுப்பை ஏற்றுள்ளார். ஹாரியும் - மேகனும் 'லெமன் எல்டர்ஃப்ளார் கேக்கை தேர்ந்தெடுத்துள்ளனர் . அதனைப்  பட்டர் க்ரீம் மற்றும் நிஜ பூக்களைக்கொண்டு அலங்கரிக்கவுள்ளார் க்ளாரே. இதைப் பற்றி க்ளாரே கூறுகையில், “இளரவரசர் ஹாரி, மார்லேவின் திருமண கேக்கை நான் வடிவமைக்கப்போகிறேன் என்று நினைக்கும்போது, என் மகிழ்ச்சியை வார்த்தைகளால் கூறமுடியவில்லை. குறிப்பாக, அவர்கள் தேர்ந்தெடுத்த கேக்கின் வகை, எனக்கு மிகவும் பிடிக்கும். அதைத் தயாரிக்க ஆவலாக இருக்கிறேன்”, என்று பூரித்துக் கூறுகிறார். இந்த ராயல் கேக்கின் விலை மட்டும் 70,000 டாலர்களாம்!

பிரிட்டன்

இந்தத் திருமணத்தில் மற்றொரு விசேஷம்... ஹாலில் அலங்கரிக்கப்படவிருக்கும் பூக்கள்! மே மாதத்தில் மலரும் பூக்களையும் , செடிகளையும் கொண்டு 'செண்ட் ஜார்ஜ்’ செப்பல் மற்றும் பக்கிங்காம் அரண்மனையையும் அலங்கரிக்கவிருப்பவர்  ப்ளாரிஸ்ட் பிலிப்பா க்ராட்டோக் ( phillippa Craddo).  இந்தப்  பூ அலங்காரங்களைத் திருமணத்தில் பயன்படுத்தி பின்பு, தொண்டு அமைப்புகளுக்கு அளிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கின்றனர். இந்த அலங்கார பூக்கள் வேலைப்பாடுகளுக்கு 1,50,000 டாலர்கள் ஆகிறதாம். 

மேகன் மார்கலே அணிவிருக்கும் திருமண உடையின் விலை 4,20,000 முதல் 5,60,000 டாலர்கள் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது . ஆனால், அரச வல்லுநர்  கேட்டை நிகோல் கூறுகையில், “மேகன் தன் ஆடையை அந்த இடத்துக்கு ஏற்ப சரியாகப் பொருத்தும்படியாக தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால், அவர் சற்றே எளிமையாகத்தான் தேர்வு செய்திருக்கிறார். கேட் மில்லிடன் அணிந்த திருமண உடையை ஒப்பிட்டுப்  பார்த்தால், மேகன் தன் ஆடை விலையில் மட்டுமே அவரை முந்தியிருக்கிறார்” என்று  தெரிவித்தார்.  கேட் மில்லிடனின் திருமண ஆடை 3,50,000 டாலர் என்பது குறிப்பிடத்தக்கது . 

பிரிட்டன்


பர்னார்ட் அண்ட்  வெஸ்ட்வூட் (Barnard and Westwood) என்ற அச்சு நிறுவனம், கடந்த 1985-ம் ஆண்டு முதல் அரச குடும்பத்தைச் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அச்சு வேலைகளைச் செய்துவருகிறது. இவர்களின் திருமணம் அழைப்பிதழை வடிவமைத்ததும், இந்த நிறுவனம்தான். கறுப்பு மற்றும் தங்க நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த அழைப்பிதழ்கள். கிட்டதட்ட 600 பேருக்கு அழைப்பிதழ் வழங்கியுள்ளது அரச குடும்பம். இதில் மிக முக்கியமாக 200 பேர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். அவர்களுக்காக மட்டும் ஸ்பெஷல் தனி வரவேற்பு நிகழ்ச்சியைத் திட்டமிட்டிருக்கிறார் இளவரசர் ஹாரியின் அப்பா இளவரசர் சார்ல்ஸ். இன்னும் இரண்டு மாதங்களுக்கு, ஹாரி - மேகனிங் திருமண செய்திதான் டாக் அப் தி லண்டனாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்