வெளியிடப்பட்ட நேரம்: 17:56 (03/04/2018)

கடைசி தொடர்பு:15:01 (20/04/2018)

இனவெறி எதிர்ப்பு...18 மாதங்கள் சிறைவாசம்... தென்னாப்பிரிக்காவின் வின்னி மண்டேலா

தென்னாப்பிரிக்காவின் ``மதர் ஆஃப் நேஷன்'' என்று தனது ஆதரவாளர்களால் அழைக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவின் இனவெறி எதிர்ப்பு ஆர்வலரும், முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மனைவியுமான வின்னி மன்டேலாவை தான். இவர் தன்னுடைய 81 வது வயதில் காலமானார். 

இனவெறி எதிர்ப்பு...18 மாதங்கள் சிறைவாசம்... தென்னாப்பிரிக்காவின் வின்னி மண்டேலா

சொத்துக்குவிப்பு வழக்கு, ஊழல் மோசடி எல்லாம் உள்ள ஒரு பெண் தலைவர். இருந்தாலும் அவரை அவரது ஆதரவாளர்கள் ``அம்மா'' என்றுதான் அழைக்கிறார்கள். இவையெல்லாம் நம் ஊரில் எங்கே., பேனர்களில் தென்படும் வாசகம் அல்ல. தென்னாப்பிரிக்காவின் ``மதர் ஆஃப் நேஷன்'' என்று தனது ஆதரவாளர்களால் அழைக்கப்பட்டது, தென்னாப்பிரிக்காவின் இனவெறி எதிர்ப்பு ஆர்வலரும் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மனைவியுமான வின்னி மன்டேலாவைதான். இவர் தன்னுடைய 81 வது வயதில் காலமானார். 

                       வின்னி

தென்னாப்பிரிக்க ஒன்றியத்தின் டிரேகே மாவட்டத்தில் உள்ள பிஸானாவில், ஹோஷா என்ற குடும்பத்தில் 1936 ம் ஆண்டு வின்னி மடிகிஜீலா-மண்டேலா பிறந்தார். வின்னி மண்டேலா என்று அழைக்கப்படும் இவர், தென்னாப்பிரிக்காவில் இனவெறி எதிர்ப்பு ஆர்வலராகவும், அரசியல்வாதியாகவும் இருந்துள்ளார். இவர் கலை, கலாசாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரதி அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசு பதவிகளை வகித்துள்ளார். இவர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) அரசியல் கட்சி உறுப்பினர். இந்தக் கட்சியில் தேசிய நிர்வாகக் குழு மற்றும் மகளிர் அணித்தலைவராகப் பணியாற்றி ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களுக்காகப் பல்வேறு வகையில் போராடி அவர்களுக்காக உரிமைகளைப் பெற்றுத்தந்துள்ளார்.   

தன்னுடைய படிப்பிற்காக ஜோஹனஸ்பேர்க்கிற்கு சென்ற இவர், அங்கு இருந்த கடுமையான சாதி முறையைக் கண்டு, அவர்களின் உரிமைக்காக அமெரிக்காவில் படிப்பதற்காக கிடைத்த ஸ்காலர்ஷிப்பை உதறினார். அங்குள்ள பாராக்வநாதா மருத்துவமனையில் தன்னுடைய முதல் சமூக பணியை ஆரம்பித்து, படிப்படியாக அரசியலில் உயர்ந்து பல்வேறு பதவிகளை வகித்தார். 1958 ம் ஆண்டு இனவெறி எதிர்ப்புப் போராளியான நெல்சன் மண்டேலாவைத் திருமணம் செய்த இவர், அவருக்கு உதவியாகப் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். 

நெல்சன் மண்டேலா சிறைக்குச் சென்ற பின்னும் கணவரின் கொள்கைகளை ஏற்று கறுப்பின மக்களுக்காகப் போராடினார். இவர் மீது ஊழல் மோசடி, திருட்டு போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும், ANC மற்றும் அவரது ஆதரவாளர்களால் `Mother of the Nation' என்று அழைக்கப்பட்டார். 

                        வின்னி

1936 : 26 செப்டம்பர் - பிஸானா, பாண்டுலேண்ட் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார்.

1953 : படிப்பிற்காக ஜோஹனஸ்பேர்க்கிற்கு சென்றார்.

1955 : சமூகப் பணியில் பட்டம் பெற்ற பிறகு, ஜோஹனஸ்பேர்க்கில் உள்ள பாராக்வநாதா மருத்துவமனையில் பணியாற்றினார். 

1957 : ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவரான வழக்கறிஞர் நெல்சன் மண்டேலாவைச் சந்தித்தார்.

1958 : நெல்சன் மண்டேலாவுடன் திருமணம் 

1962 : நெல்சன் மண்டேலா ஹோவிக்கு என்ற இடத்திற்கு அருகே கைது செய்யப்பட்டார். 

1964 : நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள் சிறைத்தண்டனை.

1969 :வின்னி மண்டேலா பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

                        வின்னி

1970 : வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் வின்னி மண்டேலா.

1976 : பிராண்ட்ஃபோர்ட் நகரத்திற்குக் குடிபெயர்ந்த வின்னி, அங்கும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

1976 : இளைஞர் எழுச்சியைத் தொடர்ந்து கறுப்பின மக்களுக்கு ஆதரவாகப் பல்வேறு சங்கங்களைத் தொடங்கினார். 

1977 : உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார். இதனால் டாக்டர் அபு பேக்கர் அஸ்வாட் உடன் க்ரேக்கெஸ் மற்றும் க்ளினிக்குகளை அமைத்தார்.

1985 : வின்னியின் வீடு தீயினால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் ஜோஹனஸ்பேர்க்கிற்குத் திரும்பினார்.  

1986 : அமைதியான முறையில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தினார் .

1991: வின்னி மண்டேலா ANC இன் தேசிய நிறைவேற்றுக் குழுவிற்கு (NEC) தேர்ந்தெடுக்கப்பட்டார். 

1992 :  கருத்து வேறுபாடு காரணமாக பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு நெல்சன் மண்டேலாவை விட்டுப் பிரிந்து சென்றார்.

1994 : ANC மகளிர் லீக்கின் தலைவரானார். அடுத்த ஆண்டே பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுக் கலை, கலாசாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

1995 :  பல்வேறு மோசடி வழக்கு காரணமாக வின்னியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார் நெல்சன் மண்டேலா.  

1996 :  நெல்சன் மண்டேலாவுடன் விவாகரத்து பெற்றார். 

                          வின்னி

1997 : ANC மகளிர் லீக்கின் தலைவரானார். நாட்டின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு எதிராகச் செயல்பட்டு 18 மாதங்கள் தனிமைப்படுத்தப்பட்ட சிறைச்சாலை. பதவியை இழந்தார்.

1999 : நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2003 : பொருளாதார மோசடி மற்றும் திருட்டு உள்ளிட்ட  25 வழக்குகள் காரணமாக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அவர் தனது பதவியை விட்டு விலகினார். 

2007 : அவர் பொலோக்வனில் ANC இன் NEC (National Executive Committe) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2009 : ஏப்ரல் மாதம் பாராளுமன்ற பொதுத் தேர்தலில், ANC உறுப்பினர்கள் பட்டியலில் 5 வது இடத்தைப் பிடித்தார்.

2013 : இவரின் வாழ்க்கை ``மண்டேலா: லாங் வாக் டூ ப்ரீடம்" என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டது.  

2016 : செப்டம்பர் மாதம் 26 ம் தேதி தன்னுடைய 80 வது பிறந்த நாளை கேப் டவுனில் உள்ள மவுண்ட் நெல்சன் ஹோட்டலில் ராணி ஜூலியஸ் மலேமா மற்றும் ஜனாதிபதி சிரில் ராமபோசா ஆகியோருடன் கொண்டாடினார். 

2018 : ஜனவரி மாதம் உகாண்டாவிலுள்ள கம்போலாவில் உள்ள மகரெர் பல்கலைக்கழகத்தில் இனவெறிக்கு எதிராகப் போராடுவதற்கு சட்ட அங்கீகாரம் பெற்ற டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது.

2018 : ஏப்ரல் 2 ம் தேதி தன்னுடைய 81 வது வயதில் தென்னாப்பிரிக்காவின் ஜோஹனஸ் பெர்க்கில் உள்ள நெடெர்கே மில்பர்க் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்